ஆயிர வைசியர்
| கோமுட்டி செட்டி | |
|---|---|
| குல தெய்வம் (பெண்) | வாசவி கன்னிகாபரமேஸ்வரி |
| மதங்கள் | இந்து சமயம் |
| மொழிகள் | தெலுங்கு & தமிழ் |
| நாடு | இந்தியா |
| பகுதி | ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா & தமிழ்நாடு, |
| உட்பிரிவுகள் | ஆரிய வைசியர் |
கோமுட்டி செட்டி என்பவர்கள் தெலுங்கு மொழி பேசும் செய்யும் இச்சமூகத்தினர் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்காலத்தில், தற்கால ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட பல நகர்புறங்களில் புலம்பெயர்ந்த ஆரிய வைசியர்கள் ஆவார். இவரது தொழில் வணிகம் செய்தல் ஆகும். இவர்களின் குல தெய்வம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆவார். இவர்களில் புகழ் பெற்றவர் நம்பெருமாள் செட்டியார் ஆவார்.
பிரிவுகள்
[தொகு]தமிழக ஆரிய வைசியர்கள் எனப்படும் கோமுட்டி செட்டி சமூகத்தினர் பதினெட்டு பிரிவுகளையும், பல கோத்திரங்களையும் கொண்டுள்ளனர். இவர்கள் 1.மஞ்சப்புத்தூர், 2.பஞ்சுபுரம் 3.தாராபுரம் 4.நகரம் 5.சமயபுரம் 6.இச்சுப்பட்டி 7.தலையநல்லூர் 8.அச்சரப்பாக்கம் 9.கள்ளகுறுஞ்சி 10.நடுமண்டலம் 11.சோழியர் 12.பேரி 13.வடம்பர் 14.பக்காமணி 15.காசுக்காரர் 16.துவரங்கட்டி 17.புலவேந்தர் 18.லிங்காயத்தனம். இவர்கள் பொதுவாக வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் ஆயிர வைசியர் எனும் பெயரில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.bcmbcmw.tn.gov.in/bclist.htm S> NO 9 -LIST OF BACKWARD CLASSES]