ஆயிர்சையர் மாடு
Jump to navigation
Jump to search
ஆயிர்சையர் மாடு என்பது ஒரு ஐராப்பிய கறவை மாடு ஆகும். இவை தென்மேற்கு இசுக்கொட்லாந்தின் ஆயிர்சையர் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவை. தோன்றிய இடத்தின் பெயரால் இவை அழைக்கப்படுகின்றன. வயது வந்த ஆயிர்சையர் மாடு 450 முதல் 600 கிலோகிராம் (990-1,320 பவுண்ட்) எடையுள்ளதாக இருக்கும். இந்த மாடுகள் பொதுவாக சிவப்பு நிறத்தோடு வெள்ளை திட்டுக்களோடு இருக்கும். சிவப்பு நிறம்கொண்டு அதில் அடர் பழுப்பு ஆரஞ்சு திட்டுகள் கூட இருக்கலாம். இவை மிகுந்த சுறுசுறுப்பான மாடுகளாக இருப்பதால் இவற்றை மேலாண்மை செய்வது கடினம். இவற்றின் பால் உற்பத்தி சொல்லும்படி இல்லை. இந்த மாடுகளின் பாலின் கொழுப்புச்சத்து மற்ற மாட்டினங்களை போலவே (4%) இருக்கும். இந்த மாட்டினம் டன்லப் மாடு அல்லது கன்னிங்காம் மாடு என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "ஆயிர்ஷையர்". கட்டுரை. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம். 30 சனவரி 2017 அன்று பார்க்கப்பட்டது.