ஆயிசா தத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிசா தத்
தத் 60வது பிலிம்பேர் விருதுகள்
பிறப்பு05.06.1960 (வயது 63)
மற்ற பெயர்கள்ஆயிசா செராப்
பணி
  • விளம்பர மாதிரி
  • திரைப்பட தயாரிப்பாளர்
  • நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1984–2007
பெற்றோர்ரஞ்சன் தத்
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்டைகர் செராப் உட்பட 2

ஆயிசா தத் (Ayesha Dutt) (பிறப்பு 5 ஜூன் 1960) இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் விளம்பர மாதிரி மற்றும் நடிகை ஆவார்.[1] [2] இவர் பாலிவுட் நடிகர் சாக்கி செராப் அவர்களை 1987 ஆம் ஆண்டு மணந்தார். இவருடைய மகன் டைகர் செராப் பாலிவுட் நடிகர் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவருடைய தந்தை பெங்காலி மொழியைச் சேர்ந்த ரஞ்சன் தத் ஆவார். இவர் இந்திய வான்படையில் விமான துணை மார்சல் மற்றும் தாயார் பெல்சிய வம்சாவளியைச் சேர்ந்த பிரெஞ்சு நாட்டவரான கிளாட் மேரி தத் டி கேவி ஆவார்.

மணிலாவில் நடந்த செல்வி இளம் உலகப் போட்டியில் போட்டியிட்டார். [3] ஆனால் இறுதிப் போட்டிக்கு வரவில்லை. அவரது சக போட்டியாளர்களால் போட்டியில் மிகவும் பிரபலமான பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டார். விளம்பர மாதிரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி வெற்றியடைந்தார்.

1984 ஆம் ஆண்டு மோக்னிசு பாலுக்கு சோடியாக தெரி பகோன் மெய்ன் என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்தார். [4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

தத் தனது நீண்டகால காதலரும் பாலிவுட் நடிகருமான சாக்கி செராப்பை தனது பிறந்தநாள் ஆன 1987 ஆம் ஆண்டு சூன் மாதம் 5 ஆம் தேதி அன்று மணந்தார். பின்னர் திரைப்பட தயாரிப்பாளராக மாறினார். இந்த சோடி சாக்கி செராப் பொழுதுபோக்கு நிறுவனம் என்ற ஊடக நிறுவனத்தை நடத்துகிறது. சோனி டிவியில் 10% பங்குகளை கூட்டாக வைத்திருந்தனர். நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை அவர்கள் தங்கள் பங்குகளை விற்று, சோனி டிவியுடன் 15 ஆண்டுகால தொடர்பை முடித்துக்கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். [5] மூத்த குழந்தை பாலிவுட் நடிகர், டைகர் ச்ராப் (பிறப்பு 1990), மற்றும் ஒரு மகள் கிருச்ணா ச்ராப் (பிறப்பு 1993) ஆவார். [6]

திரைப்படவியல்[தொகு]

நடிகை[தொகு]

ஆண்டு தலைப்பு பங்கு
1983 தேரி பாகோன் மெய்ன் காஞ்சி

தயாரிப்பாளர்[தொகு]

ஆண்டு தலைப்பு
2000 சிசு தேசு மே கங்கா ரெக்தா கைன்
2001 கிரகான்
2003 ஏற்றம்
சந்தியா
2007 பாம்பில் மற்றும் பீட்ரைசு

மேற்கோள்கள்[தொகு]

  1. Indorewala, Sharmeen Hakim (14 December 2014). "Ayesha Shroff tells court she couldn't have been involved with Sahil because he is gay". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Ayesha-Shroff-tells-court-she-couldnt-have-been-involved-with-Sahil-because-he-is-gay/articleshow/45502075.cms. பார்த்த நாள்: 30 December 2018. 
  2. "Romance between Jackie Shroff and model Ayesha Dutt heads for matrimony". India Today. 14 April 1987. https://www.indiatoday.in/magazine/eyecatchers/story/19870415-romance-between-jackie-shroff-and-model-ayesha-dutt-heads-for-matrimony-798735-1987-04-15. பார்த்த நாள்: 1 February 2021. 
  3. "India in 1980: Major events and happenings" (in en). India Today. 26 December 2005. https://www.indiatoday.in/magazine/cover-story/story/20051226-india-in-1980-major-events-and-happenings-786336-2005-12-26. 
  4. "Tiger Shroff's mom Ayesha Shroff worked with Mohnish Bahl in Teri Baahon Mein. The throwback pics are mind-boggling" (in en). The Indian Express. 2 March 2017. https://indianexpress.com/article/entertainment/bollywood/tiger-shroff-mother-ayesha-shroff-mohnish-bahl-teri-baahon-mein-see-pics-4550868/. 
  5. Joshi, Tushar (4 July 2012). "Ayesha and I have separate lives: Jackie Shroff" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Ayesha-and-I-have-separate-lives-Jackie-Shroff/articleshow/14645089.cms. 
  6. Hakim, Sharmeen (6 September 2019). "After 4 months of mudslinging, Ayesha, Sahil Khan call truce - Times of India" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/After-4-months-of-mudslinging-Ayesha-Sahil-Khan-call-truce/articleshow/46405048.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிசா_தத்&oldid=3740393" இலிருந்து மீள்விக்கப்பட்டது