ஆமூர் மல்லன்
Jump to navigation
Jump to search
ஆமூர் மல்லன் சங்ககாலக் குறுநில மன்னர்களில் ஒருவன்.
ஆமூர் என்னும் பெயர் கொண்ட ஊர்கள் 3 இடங்களில் சங்ககாலத்தில் இருந்ததைச் சங்கநூல்கள் காட்டுகின்றன. அவற்றுள் திருச்சி மாவட்டத்தில் காவிரிக்கு வடகரையில் உள்ள முக்காவல்நாட்டு ஆமூரை ஆண்டவன் இந்த ஆமூர்மல்லன்.
இந்த ஆமூர்மல்லன், போர்வை (இக்காலப் பேட்டைவாய்த்தலை) என்னும் ஊரை ஆண்டுகொண்டிருந்த சோழ இளவரசன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி என்பவனைத் தாக்கிய மற்போரில் தோல்வியுற்றான்.
இவர்களது போரைப்பற்றிச் சாத்தந்தையார், நக்கண்ணையார் ஆகிய சங்ககாலப் புலவர்கள் பாடியுள்ளனர்.