ஆப்ரேசன் விண்ட்மில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்பயணத்தின் போது கொண்டு செல்லப்பட்ட பொருட்கள்

ஆப்ரேசன் விண்ட்மில் (Operation Windmill) என்பது அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படை 1947-1948இல் அண்டார்டிக்காவில் பல்வேறு நோக்கங்களுக்காக ஆய்வு பணிகளை மேற்கொண்ட மேம்பாட்டுத் திட்டமாகும். இந்த நடவடிக்கையானது ஆபரேஷன் ஹைஜம்ப் எனப்படும் முதல் அண்டார்டிகா மேம்பாட்டுத் திட்டத்தின் தொடர்ச்சியாகும்.. இத்திட்டத்தின் தொடர் பணியாக மேற்கொண்ட ஆய்வுதான் "இரண்டாவது அண்டார்டிகா வளர்ச்சி திட்டம்-ஆப்ரேசன் விண்ட்மில்" .  [1][2]

இந்த ஆய்வு மற்றும் பயிற்சி பணி 1947-48 இல் அண்டார்டிகாவில் நடத்தப்பட்டது. இந்த பயணம் பர்டன் தீவிற்கு பணி உடைக்கும் கப்பல் யுஎஸெஸ் எடிஸ்டோ(AG-89) மூலமாக அமெரிக்கக் கடல்படைத் தளபதி ஜெரால்ட் கெட்சம் தலைமையில் நடத்தப்பட்டது. கப்பலானது 1 நவம்பர் 1947 அன்று பனாமா கால்வாயில் பயணம் பர்டன் தீவுடன் சந்திப்பதற்காக பயணம் செய்தது.[3][4]

இந்த ஆய்வின் மூலம் அண்டார்டிகாவின் பனி பெய்யும் தன்மை, நீருக்கடியில் உள்ள இடர்பாடுகள், போன்ற பல்வேறு விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் கட்டுபாட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.பறவையியல் நிபுணர் மால்கம் டேவிஸ் விலங்கியல் ஆய்வுகளுக்காக உயிருள்ள விலங்குகளான பெங்குவின் மற்றும் சிறுத்தை முத்திரைகள் போன்றவற்றை சேகரித்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. US Department of Homeland Security.
  2. U.S. NAVY SECOND ANTARCTICA DEVELOPMENTS PROJECT, OPERATION WINDMILL, 1947–1948. http://www.south-pole.com/windmill.htm
  3. US Department of Homeland Security. United States Coast Guard Historian's Office. http://www.uscg.mil/history/webcutters/Edisto_1965.asp பரணிடப்பட்டது 2012-10-15 at the வந்தவழி இயந்திரம்
  4. U.S. NAVY SECOND ANTARCTICA DEVELOPMENTS PROJECT, OPERATION WINDMILL, 1947–1948. http://www.south-pole.com/windmill.htm
  5. Brady, Hillary (28 January 2016). "Explore the Arctic with Operation Windmill". Smithsonian Institution Archives. பார்க்கப்பட்ட நாள் 14 December 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Operation Windmill
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்ரேசன்_விண்ட்மில்&oldid=3695755" இலிருந்து மீள்விக்கப்பட்டது