உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்பிள் (செயற்கைக்கோள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்பிள்
Ariane Passenger Payload Experiment
திட்ட வகைதகவல் தொடர்பு
இயக்குபவர்EADS Astrium
திட்டக் காலம்2 ஆண்டுகள், 3 மாதங்கள்
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்புஇந்தியா இசுரோ
ஏவல் திணிவு350 கிலோகிராம்கள் (770 lb)
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்19 June 1981 (1981-06-19)
ஏவுகலன்ஏரியன் 1
ஏவலிடம்கோராவ் இ.எல்.ஏ-1
திட்ட முடிவு
முடக்கம்19 September 1983 (1983-09-20)
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemபுவிமைய்ய
சுற்றுவெளிபுவிநிலைப்பு

ஆப்பிள் செயற்கைக்கோள் ( Ariane Passenger PayLoad Experiment) இந்தியா விண்வெளியில் செலுத்திய ஆறாவது செயற்கைக் கோளாகும். இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய இச்செயற்கைக்கோள் இந்தியாவின் தகவல் தொடர்புத் துறைக்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் செலுத்தப்பட்டது. 1981 ஆம் ஆண்டு சூன் மாதம் 19 ஆம் நாள் தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் இருக்கும் கோராவ் என்ற தளத்திலிருந்து ஏரியன் என்ற ஏவுகலத்தால் இச்செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. சி-பட்டை அலை வாங்கிச் செலுத்தி இச்செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டிருந்தது. ஏரியன் பாசஞ்சர் பேலோட் எக்சுபெரிமெண்ட் என்ற ஆங்கிலச் சொற்களின் சுருக்கமே ஆப்பிள் என்றழைக்கப்படுகிறது.

ஆப்பிளே, இந்தியாவின் முதலாவது புவிநிலைச் சுற்றுப்பாதை மூவச்சு நிலையாக்க தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். 1981 ஆம் ஆண்டு சூலை 16 அன்று இச்செயற்கைக்கோள் 102° கிழக்கு தீர்க்கரேகையில் நிலைநிறுத்தப்பட்டது. 672[1] கிலோ எடையுள்ளதாகத் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் செயற்கைக்கோள் பல்வேறு தகவல் தொடர்பு பரிசோதனைகளுக்கும் தேவைகளுக்கும் பயன்பட்டு 27 மாதங்கள் விண்ணில் வலம் வந்த இது 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 இல் செயலிழந்தது . தொலைகாட்சி ஒளிபரப்பு, வானொலி ஒலிபரப்பு ஆகிய சேவைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உருளை வடிவத்தில் 1.2 மீட்டர் விட்டமும் 1.2 மீட்டர் உயரமும் கொண்டதுதான் இந்த ஆப்பிள் செயற்கைக்கோள் ஆகும், இரண்டு 6/4 கிகா எர்ட்சு அலைவாங்கிச் செலுத்திகள், 0.9 விட்டமுள்ள பரவளைய வானலை வாங்கி இணைக்கப்பட்டு இவ்விண்கலம் தயாரிக்கப்பட்டது.

ஆப்பிள் (தனிக்குறிப்புகள்)
திட்டம் புவிநிலை தகவல்தொடர்பு செயற்கைக்கோள்[2]
எடை 670 kg[2]
தொடக்க ஆற்றல் 210 வாட்டுகள்[2]
விண்கலச்சுமை C-பட்டை அலைவாங்கிகள் (இரண்டு)[2]
ஏவிய நாள் சூன் 19, 1981[2]
ஏவு வாகனம் ஏரியன் -1(V-3)[2]
சுற்றுப்பாதை புவி ஒத்தியங்கு சுற்றுப்பாதை[2]
திட்டக் காலம் இரண்டு ஆண்டுகள்[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ISRO success stories". THE HINDU. 28 April 2001. பார்க்கப்பட்ட நாள் 2013-03-17....This important opportunity was utilised to build indigenously a 672-kg state-of-the-art three-axis-stabilised (as against the spin-stabilised Aryabhata) geosynchronous communication satellite called APPLE – Ariane Passenger Payload Experiment – which was launched in June 1981.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "Welcome To ISRO :: Satellites :: Geo-Stationary Satellite :: APPLE". Isro.org. 1981-06-19. Archived from the original on 2011-03-17. பார்க்கப்பட்ட நாள் 2013-03-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பிள்_(செயற்கைக்கோள்)&oldid=3542684" இலிருந்து மீள்விக்கப்பட்டது