ஆப்கான் பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்பத் குலா
thumb
ஸ்டீவ் மெக்குரி புகைப்படம் எடுத்த ஆப்கான் பெண்
ஆண்டு1984
ஆக்கப் பொருள்Kodachrome 64 color slide film, with a Nikon FM2 camera and Nikkor 105mm Ai-S F2.5 lens.
விடயம்சார்பத் குலா
உரிமையாளர்ஸ்டீவ் மெக்குரி

ஆப்கான் பெண் (Afghan Girl) என அழைக்கப்பட்ட சரபாத் குலா (Sharbat Gula) 1972 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் ஆப்கானித்தானைச் சேர்ந்தவர். சார்பத் குலாவின் வித்தியாசமான பச்சை நிற கண் விழிகள் காரணமாக, புகைப்பட நிபுணர் ஸ்டீவ் மெக்குரியால் புகைப்படம் எடுக்கப்பட்டவர்.[1]அப்புகைப்படத்தினால் இவர் ஆப்கான் பெண் என அழைகப்பட்டார். அப்புகைப்படம் 1985 ஆம் வருடத்திய நேஷனல் ஜியாக்கிரபி இதழில் அட்டைப் படமாக வெளிவந்தது. அப்புகைப்படம் எடுக்கப்படும் போது குலா ஆப்கான் அகதியாக பாகிஸ்தான் அகதிகள் முகமில் தங்கியிருந்தார். அப்போது அவரது வயது 12. 2002 ஆம் ஆண்டு அதே புகைப்படக்காரரால் மீண்டும் புகைப்படம் எடுக்கப்படும் வரை குலா ஆப்கான் பெண் என்றே அறியப்பட்டார். அப்புகைப்படமானது ஆப்கானின் மோனோலிசா என்று அழைக்கப்படுகிறது.[2]

வாழ்க்கை வரலாறு[தொகு]

குலா பஷ்தூன் இனத்தைச் சார்ந்தாவர். சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் போர் புரிந்த போது இவரின் பெற்றோர் கொல்லப்பட்டனர். அதன் பின் அகதியாக பாகிஸ்தான் அகதிகள் முகாமில் வசித்தவர்.[3]

திருமண வாழ்க்கை[தொகு]

1980 களின் பிற்பகுதியில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. 1992 ஆம் ஆண்டு இவர் ஆப்கானிஸ்தான் திரும்பினார். இவருக்கு ரோபினா, ஷாகிதா மற்றும் அலியா என்ற மூன்று மகள்கள் உள்ளனர். தனக்குக் கிடைக்காத கல்வி தனது மகள்களுக்குக் கிடைக்க வேண்டும் என குலா கூறியுள்ளார்.

புகைப்படம்[தொகு]

1984 ஆம் வருடம் நாஜிர் பாஹ் அகதிகள் முகாமில் நேஷனல் ஜியாகிரபிக் குழுமத்தின் புகைப்பட நிபுணர் ஸ்டீவ் மெக்குரியால் குலா புகைப்படம் எடுக்கப்பட்டார். நிக்கான் எஃப்.எம் 2 வகை புகைப்படக் கருவியில் நிக்கார் 105 மி.மி எஃப் 2.5 ஆடி பயன்படுத்தப்பட்டு இப்புகைப்படம் எடுக்கப்பட்டது.

தேடுதல்[தொகு]

புகைப்படம் எடுக்கும் போது குலாவைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது. 2002 ஆம் ஆண்டு இவரை மீண்டும் தேடிக்கண்டடைந்த பின்னரே இவரைப் பற்றி தெரிய வந்தன. புகைப்பட நிபுணர் ஸ்டீவ் மெக்குரி 1990 ஆம் ஆண்டிலிருந்து இவரை பலமுறை தேடிவந்துள்ளார். 2002 குலா தனது 30 ஆம் வயதில் கண்டுபிடிக்கப்பட்டார். தன்னை இதற்கு முன் புகைப்படம் எடுத்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். பழைய புகைப்படத்துடன் இவரது கண்விழி ஒப்பிடப்பட்டு இவர்தான் ஆப்கான் பெண் என ஜான டாஹ்மான் உறுதி செய்தார். குலா தனது புகழ் பெற்ற ஆப்கான் பெண் புகைப்படத்தை 2002 ஆம் ஆண்டிற்கு முன் கண்டதில்லை. 2021-இல் தாலிபான்கள் ஆப்கானித்தானை கைப்பற்றிய பின்னர் சார்பத் குலா இத்தாலியில் அடைக்கலம் அடைந்துள்ளார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Famed 'Afghan Girl' Finally Gets a Home
  2. "Black and White picture says it all". Ikràn. 15 February 2011. http://ikranm.blogspot.com/2011/02/when-picture-says-it-all.html. பார்த்த நாள்: 2012-01-14. 
  3. Lucas, Dean. "Afghan Eyes Girl". Famous Pictures Magazine. Retrieved 2013-01-14.
  4. Nat Geo Green-Eyed Girl, "Most Famous Afghanistan Refugee", Now In Italy
  5. National Geographic green-eyed ‘Afghan Girl’ evacuated to Italy
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்கான்_பெண்&oldid=3379373" இருந்து மீள்விக்கப்பட்டது