ஆபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆபா
ABBA - TopPop 1974 5.png
1974இல் ஆபா (இடதிலிருந்து)
பென்னி ஆண்டர்சன், ஆன்னி-ஃபிரிட் லோங்சுடாடு (ஃபிரிடா),
அக்னெதா ஃபல்ட்சுகோகு, யோர்ன் உல்வேயசு
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்யோர்ன் & பென்னி, அக்னேதா & அன்னு-பிரிட்
பிறப்பிடம்ஸ்டாக்ஹோம், சுவீடன்
இசை வடிவங்கள்
இசைத்துறையில்1972–1982, 2018–நடப்பில்
வெளியீட்டு நிறுவனங்கள்
 • போலார்
 • போலிடார்
 • அத்திலாந்திக்கு
 • எபிக்
 • RCA
 • வோகு
 • சன்சைன்
இணைந்த செயற்பாடுகள்
 • எப் இசுடார்சு
 • ஹூட்டெனானி சிங்கர்சு
 • பென்னி ஆண்டர்சன்சு ஓர்கெசுட்டர்
இணையதளம்abbasite.com
உறுப்பினர்கள்
 • அக்னேதா
 • யோர்ன்
 • பென்னி ஆண்டர்சன்
 • அன்னி-பிரிட்

ஆபா (ABBA) சுவீடிய பரப்பிசைக் குழு. இது 1972இல் ஸ்டாக்ஹோமில் அக்னேதா, யோர்ன், பென்னி ஆண்டர்சன், அன்னி-பிரிட் லிங்சுடாடு இணைந்து உருவாக்கியதாகும். இந்தக் குழுவின் பெயர் இதிலுள்ள உறுப்பினர்களின் முதல் பெயரின் முதலெழுத்தைக் கொண்டு அமைந்ததாகும். பரப்பிசை வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இசைக்குழுவாக விளங்குகின்றனர். 1974 முதல் 1982 வரை உலகின் இசைத்தட்டு விற்பனைகளில் சாதனை படைத்தனர். 1974இல் ஐக்கிய இராச்சியத்தின் பிரைட்டனில் யூரோவிசன் பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று தங்கள் இசையுலக வாழ்வைத் தொடங்கினர்.

ஆபா 380 முதல் 500 மில்லியனுக்கும் கூடுதலான இசைத்தட்டுக்களை விற்பனை செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[2][3] அனைத்துக் காலத்தும் மிகக் கூடுதலான விற்பனையுடைய இசைக்கலைஞர்களாக கருதப்படுகின்றனர்.[4] ஐரோப்பக் கண்டத்திலிருந்தும் ஆங்கிலம் பேசா உலகிலிருந்தும் மிகவும் விற்பனையான இசைக்குழுவாகவும் உள்ளனர்.[4] ஆங்கிலம் பேசாத நாடு ஒன்றிலிருந்து ஆங்கிலம் பேசும் நாடுகளில் விற்பனை அட்டவணைகளில் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களும் ஆவர்; ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, கனடா, ஆத்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆபிரிக்கா, ஐக்கிய நாடுகளின் விற்பனைத் தரவுகளில் முதலாவதாக இருந்த சாதனை புரிந்தனர்.[5] ஐக்கிய இராச்சியத்தில் முதல் வரிசையெண்ணில் வந்த எட்டுத் தொகுப்புகளை தொடர்ந்து கொடுத்த சாதனையும் இணையாகப் புரிந்தனர்.[6] இந்த இசைக்குழு இலத்தீன் அமெரிக்காவிலும் குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்தனர்; தங்களுடைய இசைத்தொகுப்பின் எசுப்பானிய பதிப்பை வெளியிட்டனர்.

இந்த இசைக்குழு செயல்பாட்டிலிருந்தபோது, இரண்டு சோடிகளாக இருந்தனர்: ஃபல்ட்சுகோகும் உல்வாயசும், மற்றும் லோங்சுடாடும் ஆண்டர்சனும். அவர்களது புகழ் ஓங்கத்தொடங்கியதும்அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இறுதியில் இரு திருமணங்களும் முறிவுற்றன. இந்த மணவாழ்க்கை மாற்றங்கள் அவர்களது இசையிலும் பிரதிபலித்தது. பின்னாளைய பாட்டுக்கள் உள்நோக்கியதாகவும் சோகமானதாகவும் இருந்தன.[7]

திசம்பர் 1982இல் ஆபா பிரிந்தபிறகு ஆண்டர்சனும் உல்வேயெசும் நாடகங்களுக்கு இசை எழுதி வெற்றி பெற்றனர்.[8][9] லோங்சுடாடும் ஃபல்ட்சுகோகும் ஒற்றைப் பாடகியாக இசைப்பயணத்தைத் தொடர்ந்தனர். இவர்களுக்கு மிதமான வெற்றியே கிடைத்தன.[10][11] ஆபாவின் இசை மெல்லச் சரிந்து வந்தது; 1989இல் பாலிகிராம் ஆபாவின் இசைத்தட்டுகளையும் பதிவுகளையும் வாங்கியபிறகு இந்த இசைத்தட்டுக்களை பன்னாட்டளவில் மீள்வெளியீடு செய்தது. செப்டம்பர் 1992இல் ஆபா கோல்டு இசைத்தொகுப்பு வெளியிடப்பட்டது. இது உலகளவில் பெரும் வெற்றி அடைந்த்து. பல திரைப்படங்கள், குறிப்பாக இம்மூயிரியல்சு வெட்டிங் (1994), தி அட்வெஞ்சர்சு ஆப் பிரிசில்லா, குயின் ஆப் டெசர்ட் (1994), ஆபா இசையில் ஆர்வத்தை மீளவும் தூண்டின. தொடர்ந்து பல நிழல் இசைக்குழுக்களும் உருவாயின. 1999இல் ஆபாவின் இசையைத் தழுவிய மம்மா மியா! உலகெங்கும் இசைப்பயணம் மேற்கொண்டு பெரும் வெற்றியடைந்தது. அதே பெயரில் வெளியானத் திரைப்படமும் 2008இல் வெளியானது. இது ஐக்கிய இராச்சியத்தில் அந்தாண்டு மிகவும் பணமீட்டிய திரைப்படமானது. இதன் தொடர்ச்சியாக மம்மா மியா! வீ கோ அகைய்ன் என்ற திரைப்படம் 2018இல் வெளியாகவுள்ளது.

2005ஆம் ஆண்டு யூரோவிசன் பாட்டுப் போட்டியின் 50வது ஆண்டுவிழாவில் ஆபா கௌரவிக்கப்பட்டனர். இந்தப் போட்டியின் வரலாற்றிலேயே வாட்டர்லூ என்ற அவர்களது பாட்டே மிகச் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[12] ராக் & ரோல் புகழரங்கில் 2010இல் ஏற்கப்பட்டனர்.[13] 2015இல் அவர்களது பாட்டு "டான்சிங் குயின்" (நடன இராணி) இசைப்பதிவு அகாதமியின் கிராம்மி புகழரங்கில் ஏற்கப்பட்டது.[14]

335 ஆண்டுகளாக செயலற்று இருந்த ஆபா இசைக்குழு ஏப்ரல் 27, 2018இல் இரண்டு புதிய பாடல்களை பதிவு செய்தனர். இதில் முதல் பாடல் – "ஐ ஸ்டில் ஹவ் பெய்த் இன் யூ" – திசம்பர் 2018இல் வெளியாகவுள்ளது.[15][16]

மேற்சான்றுகள்[தொகு]

 1. Moskowitz, David V. (31 October 2015). The 100 Greatest Bands of All Time: A Guide to the Legends Who Rocked the World. GREENWOOD Publishing Group Incorporated. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1440803390. https://books.google.com/books?id=8XG9CgAAQBAJ&pg=PA1&lpg=PA1. 
 2. Mike Evans: Rock'n'Roll's Strangest Moments: Extraordinary But True Tales from 45 Years of Rock & Roll History. Pavilion Books, 2014, chapter ABBA again (Sweden, 1974–1981), pp. 169 (excerpt (Google books))
 3. "Why are ABBA so popular?". British Broadcasting Corporation (BBC). பார்த்த நாள் 7 June 2016.
 4. 4.0 4.1 Trauth, Beti (28 February 2012). "ABBA music enhances 'Mamma Mia!' at the Van Duzer". Times-Standard. http://www.times-standard.com/tcw/ci_20060193. பார்த்த நாள்: 19 April 2013. 
 5. "Abba".
 6. "Eminem scores seventh consecutive UK Number 1 album". Official Charts Company (11 November 2013). பார்த்த நாள் 30 September 2016.
 7. Comments about this period start around time 1:10. YouTube.com (30 July 2013). Retrieved 19 April 2014.
 8. "Benny Andersson" (en-us).
 9. "Björn Ulvaeus" (en-us).
 10. "Agnetha Fältskog" (en-us).
 11. "Anni-Frid Lyngstad" (en-us).
 12. "Abba Win 'Eurovision 50th' Vote". BBC News. 23 October 2005. http://news.bbc.co.uk/1/hi/entertainment/music/4366574.stm. பார்த்த நாள்: 20 July 2006. 
 13. "ABBA Makes Rock and Roll Hall of Fame Los Angeles Times 16 December 2009". Los Angeles Times. 16 December 2009. http://www.latimes.com/entertainment/news/la-et-quick16-2009dec16,0,6237547.story. பார்த்த நாள்: 23 August 2010. 
 14. "GRAMMY Hall Of Fame Class Of 2015" (16 December 2014).
 15. "ABBA Reunite, Announce New Songs". பார்த்த நாள் 29 April 2018.
 16. "@abbaofficial on Instagram: “❤️ #abbaofficial #abba”". பார்த்த நாள் 29 April 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆபா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபா&oldid=2759320" இருந்து மீள்விக்கப்பட்டது