ஆனி மேரி ஆசுடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனி மேரி ஆசுடின் (Anne Marie Astin) ஓர் ஆத்திரேலிய உயிர்வேதியியலாளர் மற்றும் தடயவியல் நிபுணர் ஆவார். தென் கிழக்கு ஆத்திரேலியாவிலுள்ள விக்டோரியா மாநிலத்தில் பெண்களின் சாதனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட விக்டோரியா கௌரவப் பெண் ஆளுமை விருதை 2010 ஆம் ஆண்டு வென்றார்[1]. 2011 ஆம் ஆண்டுக்கான ராணி பிறந்தநாள் மரியாதை விருதான பொதுச் சேவை விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. பால் வளம் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துதல், உணவுப் பாதுகாப்புத் தரங்கள் தொடர்பான ஆலோசனைகளுக்கு ஆசுடின் குறிப்பிடத்தக்கவர்[2][3].

கல்வி[தொகு]

இங்கிலாந்து நாட்டிலுள்ள டர்காம் நகரில் ஆசுடின் பிறந்தார். லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் 1973 ஆம் ஆண்டு இவர் வேதியியல் மற்றும் உயிர்வேதியியல் துறையில் இளம் அறிவியல் பட்டமும், 1976 ஆம் ஆண்டு உயிர்வேதியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்[3][4]. பின்னர் ஆத்திரேலியாவின் கிரிப்பித் பல்கலைக்கழகத்தில் பொதுத்துறை மேலாண்மை படிப்பில் சான்றிதழ் பெற்றார்[2].

தொடக்க்கால வாழ்க்கை[தொகு]

ஆசுடின் அவரது தாயாரல் இந்த்த் துறையில் நுழைய ஊக்குவிக்கப்பட்டார். பாரம்பரியமற்ற பெண் வேடங்களைத் தொடர ஆசுடினுக்கு ஊக்கம் கொடுத்தார்[3][4]. மொனாசு பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் பணியை ஆசுடின் தொடங்கினார். பின்னர் தடயவியல் நிபுணரானார். காவல் துறை பணிகளில் அதிக கவனம் செலுத்தினார். பின்னர் பால் வளத்துறையில் சேர்ந்தார். பின்னாளில் இவர் விக்டோரியா அரசாங்கத்தில் பால் உணவு பாதுகாப்பு ஆணையத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் உயர்ந்தார்[2].

தொழில்[தொகு]

ஆத்திரேலிய உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக ஆசுடின் பணிபுரிகிறார்[4][5][6][7] the Chair of the William Angliss Institute Board [8] and is the Chair of the. வில்லியம் ஆங்கிலிசு நிறுவன வாரியத்தின் தலைவர் Food, Beverage and Pharmaceutical Industry Reference Committee, உணவு, பானம் மற்றும் மருந்து தொழில் குறிப்புக் குழுவின் தலைவர் போன்ற பதவிகளையும் ஆசுடின் வகிக்கிறார்[9].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Astin, Anne Marie". It's an Honour. https://www.itsanhonour.gov.au/honours/honour_roll/search.cfm?aus_award_id=1144655&search_type=quick&showInd=true. பார்த்த நாள்: 21 November 2015. 
  2. 2.0 2.1 2.2 "About, Dr Anne Astin, Chair & President". https://www.aifst.asn.au/dr-anne-astin-chair-a-president.htm. பார்த்த நாள்: 2015-11-16. 
  3. 3.0 3.1 3.2 Bowling, Danielle (15 July 2013). "Dairy leader named as new AIFST president". http://www.foodmag.com.au/news/dairy-leader-named-as-new-aifst-president. பார்த்த நாள்: 18 November 2015. 
  4. 4.0 4.1 4.2 "Anne M. Astin's Biography" இம் மூலத்தில் இருந்து 2015-11-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151120170307/http://www.cambridgewhoswho.com/Members/INTL/Anne-Astin-45901.html. பார்த்த நாள்: 2015-11-16. 
  5. "Dairy leader to head food science institute". Austrialan Dairy Farmer. 19 June 2013. http://adf.farmonline.com.au/news/magazine/industry-news/general/dairy-leader-to-head-food-science-institute/2664878.aspx. பார்த்த நாள்: 19 November 2015. 
  6. "New board for Dairy Food Safety Victoria.". Australasian Business Intelligence(subscription required). March 30, 2004. https://www.highbeam.com/doc/1G1-114721312.html. பார்த்த நாள்: 19 November 2015. 
  7. "Guidelines boost for food safety.". Australasian Business Intelligence(subscription required). May 17, 2006. https://www.highbeam.com/doc/1G1-145896689.html. பார்த்த நாள்: 19 November 2015. 
  8. "William Angliss Institute Board" (in en). https://www.angliss.edu.au/about/william-angliss-institute-board/. 
  9. "Committee Membership" (in en-AU). https://www.skillsimpact.com.au/food-beverage-and-pharmaceutical/industry-reference-committee/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனி_மேரி_ஆசுடின்&oldid=3543242" இருந்து மீள்விக்கப்பட்டது