ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலகம் (Andhra Pradesh Secretariat) என்பது ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சரும் அவருடைய அமைச்சர்களும் பணிபுரியும் அலுவலகம் ஆகும்[1] . இவ்வலுவலகம் உசேன் சாகர் ஏரிக்கு தெற்கில் அமைதுள்ளது.

வரலாறு[தொகு]

சாய்பாபாத அரண்மனையில் இவ்வலுவலகம் இயங்குகிறது. ஐதராபாத்தின் ஆறாம் நிசாமான மிர் மகபூப் அலிகான் காலத்தில் 1888 ஆம் ஆண்டில் இவ்வரண்மனை கட்டப்பட்டது.

துறைகள்[தொகு]

ஏ வளாகம்[தொகு]

உள்துறை, சிறுபான்மையினர் நலத் துறை

பி வளாகம்[தொகு]

பொது நிர்வாகம்

சி வளாகம்[தொகு]

முதல் அமைச்சர் அலுவலகம், அரசு முதன்மைச் செயலர்

டி வளாகம்[தொகு]

கால்நடை பராமரிப்பு, விவசாயம் மற்றும் கூட்டுறவு, சமூக நலத்துறை, நிதி, தொழிற்துறை மற்றும் வணிகவரித் துறை, எரிசக்தி, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பம்.

ஜி வளாகம்[தொகு]

மரபுவழிக் கட்டிடம்

எச் வளாகம்[தொகு]

தலைமை தேர்தல் அதிகாரி, ஆட்சி மொழி ஆணையம், மத்திய நூலகம், கண்காணிப்பு ஆணையம், செயலாளர் சங்கம் மற்றும் செயலகம் ஊழியர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க அலுவலகம்.

ஜே வளாகம்[தொகு]

சட்டம், உயர் கல்வி, பள்ளிக் கல்வி, போக்குவரத்து, சாலைகள் மற்றும் கட்டிடங்கள், நீர்ப்பாசன மற்றும் கட்டளை பகுதி மேம்பாடு.

கே வளாகம்[தொகு]

நிதி துறையின் மத்தியப் பணப்பிரிவு, செயலாளர் ஊழியர் கூட்டுறவு கடன் சங்கம், சம்பளம் மற்றும் கணக்குகள் அலுவலகக் கிளை, தந்தி அலுவலகம் மற்றும் அஞ்சல் அலுவலகம்.

எல் வளாகம்[தொகு]

நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர அபிவிருத்தி, தொழிலாளர், பெண்கள் அபிவிருத்தி மற்றும் குழந்தைகள் நலம், சுகாதாரம், மருத்துவம், குடும்ப நலத்துறை, திட்டமிடல், வீடமைப்பு, வருவாய், பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக மேம்பாட்டு துறைகள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kumar, Vinay (2011-01-06). "Srikrishna Committee comes out with 6 options". தி இந்து. 2011-08-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-07-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

ஆள்கூறுகள்: 17°24′32″N 78°28′12″E / 17.409°N 78.470°E / 17.409; 78.470