ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலகம்

ஆள்கூறுகள்: 17°24′32″N 78°28′12″E / 17.409°N 78.470°E / 17.409; 78.470
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலகம் (Andhra Pradesh Secretariat) என்பது ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சரும் அவருடைய அமைச்சர்களும் பணிபுரியும் அலுவலகம் ஆகும்[1] . இவ்வலுவலகம் உசேன் சாகர் ஏரிக்கு தெற்கில் அமைதுள்ளது.

வரலாறு[தொகு]

சாய்பாபாத அரண்மனையில் இவ்வலுவலகம் இயங்குகிறது. ஐதராபாத்தின் ஆறாம் நிசாமான மிர் மகபூப் அலிகான் காலத்தில் 1888 ஆம் ஆண்டில் இவ்வரண்மனை கட்டப்பட்டது.

துறைகள்[தொகு]

ஏ வளாகம்[தொகு]

உள்துறை, சிறுபான்மையினர் நலத் துறை

பி வளாகம்[தொகு]

பொது நிர்வாகம்

சி வளாகம்[தொகு]

முதல் அமைச்சர் அலுவலகம், அரசு முதன்மைச் செயலர்

டி வளாகம்[தொகு]

கால்நடை பராமரிப்பு, விவசாயம் மற்றும் கூட்டுறவு, சமூக நலத்துறை, நிதி, தொழிற்துறை மற்றும் வணிகவரித் துறை, எரிசக்தி, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பம்.

ஜி வளாகம்[தொகு]

மரபுவழிக் கட்டிடம்

எச் வளாகம்[தொகு]

தலைமை தேர்தல் அதிகாரி, ஆட்சி மொழி ஆணையம், மத்திய நூலகம், கண்காணிப்பு ஆணையம், செயலாளர் சங்கம் மற்றும் செயலகம் ஊழியர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க அலுவலகம்.

ஜே வளாகம்[தொகு]

சட்டம், உயர் கல்வி, பள்ளிக் கல்வி, போக்குவரத்து, சாலைகள் மற்றும் கட்டிடங்கள், நீர்ப்பாசன மற்றும் கட்டளை பகுதி மேம்பாடு.

கே வளாகம்[தொகு]

நிதி துறையின் மத்தியப் பணப்பிரிவு, செயலாளர் ஊழியர் கூட்டுறவு கடன் சங்கம், சம்பளம் மற்றும் கணக்குகள் அலுவலகக் கிளை, தந்தி அலுவலகம் மற்றும் அஞ்சல் அலுவலகம்.

எல் வளாகம்[தொகு]

நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர அபிவிருத்தி, தொழிலாளர், பெண்கள் அபிவிருத்தி மற்றும் குழந்தைகள் நலம், சுகாதாரம், மருத்துவம், குடும்ப நலத்துறை, திட்டமிடல், வீடமைப்பு, வருவாய், பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக மேம்பாட்டு துறைகள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kumar, Vinay (2011-01-06). "Srikrishna Committee comes out with 6 options". தி இந்து. Archived from the original on 2011-08-24. பார்க்கப்பட்ட நாள் 2011-07-29.