ஆதி குமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆதி குமணன் (பிறப்பு: பிப்ரவரி 9 1950, இறப்பு: மார்ச்சு 28 2005) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவராவார்.

எழுத்துத்துறை ஈடுபாடு[தொகு]

1970 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். அதிகமாக புதுக்கவிதைகளையே இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. தமிழ் மலரில் அவர் பணியாற்றத் தொடங்கிய 1970-ஆம் ஆண்டுகளில்தான் புதுக்கவிதைத் துறை மலேசியாவில் வேர் விடத் தொடங்கியது. அந்த வேருக்கு நீர் வார்த்த பெருமைக்குரியவர் ஆதி குமணன் அவர்களே. புதன்கிழமை தோறும் "புதன் மலர்" என்ற சிறப்புப் பக்கத்தை ஒதுக்கிஇ அதில் புதுக்கவிதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

ஆரம்பித்த பத்திரிகைகள்[தொகு]

"வானம்பாடி" (1977) "தமிழ் ஓசை"

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_குமணன்&oldid=2715496" இருந்து மீள்விக்கப்பட்டது