உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதம் (இசுலாம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆதம்
alayhi s-salām -
 ( عليه السلام )
The name Adam written in Islamic calligraphy followed by Peace be upon him.
தாய்மொழியில் பெயர்ʾĀdam - آدم
வாழ்க்கைத்
துணை
ஹவ்வா(அலைஹிஸ்ஸலாம்)حواء
பிள்ளைகள்هابيل ,قابيل

ஆதம் ஆபிரகாமிய சமயங்களின்படி கடவுளால் படைக்கப்பட்ட முதல் மனிதன் ஆவார். ஆதம் இஸ்லாம், பஹாய், ஆகிய மதங்களில் இறை தூதராகக் கருதப்படுகிறார். ஆதம் இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர் என்று விவிலியமும், குரானும் கூறுகின்றன.

ஆதம் நபியின் உருவாக்கமும், மலக்குகளின் ஆட்சேபனையும்:

இந்த உலகத்தைப் படைத்த இறைவன், அதில் வாழ்வதற்கு ஏற்ற சமுதாயமாக மனிதனைப் படைக்க எண்ணி தனது எண்ணத்தை மலக்குகளிடத்தில் சொல்லிக் காட்டினான். அந் நேரத்தில் அந்த மலக்குகள் இறைவனின் எண்ணத்தை ஆட்சேபித்து கருத்துத் தெரிவித்தார்கள்.இதனை திருமறைக் குர்ஆன் இவ்வாறு சொல்லிக் காட்டுகிறது.

பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன். என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது, அங்கே குழப்பம் விளைவித்து, இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னை புகழ்ந்து போற்றுகிறோமே, குறைகள் அற்றவன் என்று உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே என்று கேட்டனர். நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று இறைவன் கூறினான். (அல் குர்ஆன் 2:30)

படைப்பு:
[தொகு]

இறைவன் தன்னுடைய பிரதிநிதியாக இந்த மண்ணில் வாழப்போகும் மனிதனாக முதன் முதலில் படைத்தது நபி ஆதம்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களைத்தான்.இவர்கள் மண்ணால் படைக்கப்பட்டவர்கள்.

குர்ஆன் வசனம்:

ஆதம் (அலை) அவர்களை படைத்தல்: (நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி ”நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகிறேன்“ எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் ”(பூமியில்) விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப்பெறும்) அவரை அதில் (உன்னுடையபிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ உன்னுடைய பரிசுத்தத்தன்மையைக் கூறி உன்னுடைய புகழைக் கொண்டு உன்னை புகழ்ந்து கொண்டிருக்கிறோம்“ என்று கூறினார்கள். அதற்கவன் ”நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்“ எனக் கூறிவிட்டான். (அல்குர்ஆன் - 2:30)

பின்பு (ஆதமைப்படைத்து) ஆதமுக்கு எல்லாப் (பொருள்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக்கொடுத்து, அவைகளை அந்த மலக்குகளுக்கு முன் பாக்கி ”(மலக்குகளே! ஆதமுக்கு என்னுடைய பிரதிநிதி ஆவதற்குரிய தகுதியில்லை என்று கூறினீர்களே! இதில்) நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் (இதோ உங்கள் முன்னிருக்கும்) இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்“ எனக்கூறினான். (அல்குர்ஆன் - 2:31)

பின்னர் நாம் மலக்குகளை (நோக்கி) “ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்“ எனக் கூறிய போது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள். அவனோ பெருமை கொண்டு விலகி (நம்முடைய கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான். (அல்குர்ஆன் - 2: 34)

துணைவி:
[தொகு]

ஆதம்(அலைஹிஸ்ஸலாம்)அவர்களின் விலாஎலும்பிலிருந்து ஒரு கோணலான எலும்பைக்கொண்டு அவர்களுக்கு துணையாக ஹவ்வா(அலைஹிஸ்ஸலாம்) (ஏவாளின் அரபு வடிவம்) அவர்களை இறைவன் படைத்தான்.அவர்கள் மிகவும் அழகாகவும்,வசீகரமாகவும் இருந்தார்கள்.

குர்ஆன் வசனம்:

ஆதம் (அலை) அவர்களுக்கு துணைவியாக ஹவ்வா(அலை) அவர்களை படைத்தல்: பின்னர் நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி)”ஆதமே! நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் (விரும்பியவற்றைத்) தாராளமாகப்புசியுங்கள். ஆனால் இந்த மரத்தை அணுகாதீர்கள். அணுகினால் நீங்கள் இருவரும் (உங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டவர்களாவீர்கள்“ என்று கூறினோம். (அல்குர்ஆன் 2:35)

சைத்தானின்(சாத்தான்) ஆணவம்:
[தொகு]

[அல்லாஹ்], ஆதம் (அலை) அவர்களுக்கு தன்னால் படைக்கப்பட்ட பொருட்களின் பெயர்களை அவனே கற்றுக்கொடுத்தான். பின் அப்பெயர்களை [மலக்கு]மார்களுக்கு விவரிக்குமாறு பணித்தான். பிறகு தன்னால் படைக்கப்பெற்ற மலக்குமார்கள் போன்றோர்களை நபி ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம் பணிய அல்லாஹ் கட்டளையிட்டான். இப்லீஸ் தவிர மற்ற ஏனையவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க சிரம் பணிந்தார்கள். இப்லீஸ் நெருப்பால் படைக்கப்பட்ட ஆணவத்தால் களிமண்ணால் படைக்கப்பட்ட மனித வர்க்கத்திற்கு சிரம்பணிய மறுத்ததுடன் கியாமத் நாள் வரை அல்லாஹ்விடத்தில் அவகாசமும் வாங்கி வந்தான். இனி என் வேலை ஆதமுடைய மக்களை நேரான வழியில் செல்வதைத் தடுத்து அவர்களுக்கு முன்னும், பின்னும், இடமும், வலமும் சென்று அவர்களை நரகத்தின் பக்கம் இழுத்து வருவேன் எனக் கூறினான்.[1]

குர்ஆன் வசனம்:

இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.(2:31)

நாம், “ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம்.(2:35) [2]


பூமியில் இறக்கப்படல்:
[தொகு]

அல்லாஹ் ,நபி ஆதம் அலைஹி வசல்லம் அவர்களுக்கு நீங்களும் உங்களது மனைவியும் இந்த சொர்கத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால், ஒரு மரத்தை சுட்டிக்காட்டி அல்லாஹ் இந்த மரத்தை நெருங்க வேண்டாம் என்று கட்டளை இட்டான் . அவ்வாறே அவர்களும் சிறிதுகாலம் சுகம் அனுபவித்தார்கள் பிறகு சைத்தான் தனது சூழ்ச்சியை அரங்கேற்றினான்.ஆனாலும் சைத்தான் சதி செய்து அவர்கள் இருவரையும் அந்தக் கனியைப் புசிக்க வைத்தான். அந்தக் கனியை உண்டவுடன் அவர்களது வெட்கத்தலங்கள் வெளிப்படையாயிற்று அவர்கள் இருவரும் சொர்கத்தில் உள்ள மரங்களில் உள்ள இலைகளை வைத்து அதனை மறைக்க முற்பட்டனர். இருவரும் ஒவ்வொரு மரமாகச் சென்று தம்முடைய உடலை மறைக்க இலை தருமாறு வேண்டினார்கள். .ஆனால் ஒரு மரமும் இலை தர மறுத்துவிட்டன.அவ்வப்பொழுது இறைவன் இருவரையும்

பூமியில் இறக்கினான்.

குர்ஆன் வசனம்:

இதன்பின், சைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்குப் பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.(2:36.)

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஒரு அறிவிப்பை இப்னு சஹது, இப்னு அஸ்கர் ஆகிய இரு அறிஞர்கள் அறிவித்த அறிவிப்பின் கருத்தாவது நபி ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவின் ஒரு பகுதி இலங்கை(ஸ்ரீலங்கா)யில் இறக்கிவைக்கப்பட்டதாகவும், ஹவ்வா(அலை) ஜித்தாவில் இறக்க வைக்கப்பட்டதாகவும் வந்துள்ளது. பின்னர் நபி ஆதம்(அலை) அவர்கள் ஹவ்வா(அலை) அவர்களை தேடிச் சென்று மக்கா அருகிலுள்ள முஜ்தலீபா (Muzdalifah) என்ற இடத்தில் ஹவ்வா(அலை) அவர்களை சந்தித்தார்கள். முஜ்தலீபா என்பது ஹஜ்ஜிக்கு செல்லக் கூடியவர்கள் ஒன்று சேர வேண்டிய இடங்களில் ஒரு இடமாகும். முஜ்தலீபா என்ற சொல் இஜ்தலபா(Izdalafah) என்ற அரபி வார்த்தையில் இருந்து வந்தது, இதன் அர்த்தம் அணுகுதல் என பொருட்படும். அதாவது அந்த இடத்தில் நபி ஆதம் (அலை) அவர்கள் அணுகியதால் (சந்தித்ததால்) முஜ்தலீபா(Muzdalifah) என பெயர் வந்து இருக்கலாம்.

அல்-தப்ரானீயில் அபு நுஹைம் மற்றும் இப்னு அஸ்கர் ஆகியோர், அபு ஹுரைறா(ரழி) அவர்களும் அறிவிக்கின்ற ஹதீஸில் நபி ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் ஒரு பகுதி (ஸ்ரீலங்கா)யில் இறக்கப்பட்டதாக வந்துள்ளது. தப்ரானீயின் மற்றோரு அறிவிப்பில் அப்துல்லா இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறிய ஹதீஸில், நபி ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் இறக்கப்பட்டதாகவும், பின்னர் மக்கா சென்ற தாகவும், அதன் பின்னர் ஷாம் (சிரியா மற்றும் அதன் சுற்று) பகுதியில் வாழ்ந்து அப்பகுதியில் மரணமடைந்தாகவும் என வந்துள்ளது.

மேற்கூறப்பட்ட பல அறிவிப்புகளில் இருந்து பார்க்கும் சமயம் ஆதம் (அலை) அவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள ஸ்ரீலங்கா பிரதேசத்தில் இறக்கப்பட்டதாக பெரும்பாலோரின் கருத்தாக உள்ளது. இப்னு பத்துட்டா (Ibn Batuttah) என்ற மொரோக்கோ நாட்டைச் சார்ந்த வரலாறு ஆய்வாளர் இவ்விஷயத்திற்காகவே இலங்கை சென்று இவ்விஷயங்களை ஆய்வு செய்தார்கள்.[3]

இதையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஆதம் நபி [1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்
  2. திருக்குர்ஆன், அத்தியாயம் 2, வசனங்கள் 31&35
  3. ஆதம் நபி பூமிக்கு இறக்கப்படுதல்:[2] பரணிடப்பட்டது 2014-09-05 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதம்_(இசுலாம்)&oldid=3684633" இலிருந்து மீள்விக்கப்பட்டது