ஆண்டுத்தொகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆண்டுத்தொகை (Annuity) என்பது நிதிக்கொள்கைகளில் ஒன்றாகும். இது தொடராக சம இடைவெளி காலங்களில் செலுத்தப்படும் அல்லது பெறப்படும் சமனான கட்டணத்தினைக் குறிக்கும். சேமிப்புக் கணக்குகளில் செலுத்தும் மாதாந்த வைப்புத்தொகை, வீட்டின் மீது பெற்றுக்கொண்ட பணத்துக்கான மாதாந்த ஈட்டுத் தொகை, மாதாந்தக் காப்புறுதிக் கட்டணம் என்பன ஆண்டுத்தொகைக்கு எடுத்துக் காட்டுகள். ஆண்டுத்தொகைகள் அவை செலுத்தப்படும் கால இடைவெளிகளின்படி வகைப்படுத்தப்படுகின்றன. இது கிழமை, மாதம், காலாண்டு, ஆண்டு அல்லது வேறு கால இடைவெளிகளில் செலுத்தப்படலாம்.

மதிப்பீடு[தொகு]

ஆண்டுத்தொகை மதிப்பீடு அன்றைய பணமதிப்பு, வட்டி வீதம், எதிர்கால மதிப்பு ஆகிய கருத்துருக்களை அடிப்படையாகக் கொண்டது.

ஆண்டுத் தொகைகள்[தொகு]

செலுத்த வேண்டிய கட்டணங்களின் எண்ணிக்கை முன்னரே தெரியுமானால் அது ஆண்டுத்தொகை உறுதி எனப்படும். வட்டி சேர்ந்த பின்னர் தவணையின் இறுதியில் கட்டணம் செலுத்தப்படுவதாயின், அந்த ஆண்டுத்தொகையை, உடனடி ஆண்டுத்தொகை அல்லது சாதாரண ஆண்டுத்தொகை என்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டுத்தொகை&oldid=1886473" இருந்து மீள்விக்கப்பட்டது