ஆண்டிமனி மின்முனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண்டிமனி மின்முனை (Antimony electrode) pH மின்முனையாக செயல்படும் திறனுக்காக ஆராயப்பட்டது.[1] இம்மின்முனையானது தனிமநிலை ஆண்டிமனியால் ஆனதாகும். ஆண்டிமனி மின்முனையின் மின் வேதியியல் செயல்முறையை பின்வரும் சமன்பாட்டால் விளக்கலாம்.

Sb2O3(s) + 6 H+ + 6 e is in equilibrium with 2Sb(s) + 3H2O

ஆக்சைடு, Sb2O3 ஆனது மின்முனையின் மேற்பரப்பில் உள்ளது. இந்த மின்முனையானது அதிக துல்லியத்தின் அளவீடுகளைக் கொடுக்கவில்லை என்றாலும், விரைவான முடிவு , எளிமை மற்றும் கரடுமுரடான கட்டுமானம் ஆகியவை தொடர்ச்சியான தொழில்துறை pH கண்காணிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். உயர்ந்த வெப்பநிலையில் இம்மின்முனையைப் பயன்படுத்தலாம். ஓர் அசாதாரண பயன்பாட்டில், மனித வயிற்றில் உள்ள pH அளவை அளவிட ஓர் ஆண்டிமனி மின்முனை பயன்படுத்தப்பட்டது. கட்டுமானத்தின் எளிமை காரணமாக மின்முனையை விழுங்கக்கூடிய அளவுக்கு சிறியதாக மாற்ற முடியும். மெல்லிய செப்பு கம்பிகள் இம்மின்முனை ஒரு முனையுடனும் மற்றொரு முனையில் ஒரு pH மீட்டரின் ஒரு முனையத்திலும் இணைக்கப்பட்டன. பரிசோதிக்கப்படுபவரின் கால் உப்பு கரைசலில் வைக்கப்பட்டது. இந்த கரைசலில் ஒரு கலோமெல் குறிப்பு மின்முனையும் வைக்கப்பட்டு மீட்டரில் உள்ள மற்ற முனையத்துடன் இணைக்கப்பட்டது.[1] மனித உடலுக்குள்ளான அளவீடுகளில் ஆண்டிமனி மின்முனைகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.[2] பகுப்பாய்வுத் தீர்மானங்களுக்கு ஆண்டிமனி அடிப்படையிலான மின்முனைகளின் பயன்பாடு மதிப்பாய்வும் செய்யப்பட்டது.[3]

ஆண்டிமனி மின்முனைகள் வணிக ரீதியாக கிடைக்கின்றன. ஐதரசன் புளோரைடு கொண்ட கரைசல்களுடன் கண்ணாடியின் வினை காரணமாக கண்ணாடி மின்முனையைப் பயன்படுத்த முடியாத ஐதரோபுளோரிக் அமிலம் கொண்ட கரைசல்களுடன் இவற்றைப் பயன்படுத்தலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Bates, Roger G. Determination of pH: theory and practice. Wiley, 1973, pp 252-256
  2. Opekun, Antone R.; Smith, J. Lacey; Graham, David Y. (1990). "Mucosal Potential Differences and Buffer Composition". Digestive Diseases and Sciences 35 (8): 950–955. https://archive.org/details/sim_digestive-diseases-and-sciences_1990-08_35_8/page/950. 
  3. Núria Serrano, José; Manuel Díaz-Cruz, Cristina; Ariño Miquel, Esteban (2016). "Antimony- based electrodes for analytical determinations". Trends in Analytical Chemistry 77: 203–213. doi:10.1016/j.trac.2016.01.011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிமனி_மின்முனை&oldid=3761296" இலிருந்து மீள்விக்கப்பட்டது