ஆண்குறிப் பெரிதாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆண்குறிப் பெரிதாக்கம் என்பது மனித ஆண்குறியின் அளவினைப் பெரிதாக்கும் முயற்சியாகும். இது ஒரு தொழிற்றுறையாக வளர்ச்சியடைந்துள்ளது. உடற்பயிற்சிகள், கருவிகள், மருத்துவம் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆண்குறியின் அளவை அதிகரிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இவற்றின் சாத்தியம் பற்றி ஆதரவானதும் எதிரானதுமான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரபலமாக அறியப்பட்ட அறிவியல் சான்றாதாரங்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

மனிதனது ஆண்குறியைப் பெரிதாக்கும் முயற்சிகள் பல நூற்றாண்டுகளின் முன்பேயே தொடங்கி விட்டன. ஆண்குறியில் ஓர் எடையைத் தொங்கவிடுவதன் மூலம் அதன் நீளத்தை அதிகரிக்க முயன்றுள்ளனர். இது ஓரளவு ஆபத்தானதுமாகும். சில ஆபிரிக்க இனக்குழுக்கள் 2000 ஆண்டுகளின் முன்னர் இம்முறையைப் பின்பற்றியதாச் சொல்லப்படுகிறது.

தற்காலத்தில் ஆண்குறையைப் பெரிதாக்கவல்லவை எனப் பல மருந்துகள் விற்பனையாகின்றன. ஆண்குறியின் நீள, அகலத்தை அதிகரிப்பதற்கான சத்திர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஓர் ஆய்வில் ஆண்குறியைப் பெரிதாக்கும் சத்திரசிகிச்சைக்குட்பட்ட ஆண்களில் பெரும்பாலானோர் திருப்தியின்மையை தெரிவித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]