மனித ஆண்குறி அளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Penis thickness measuring.jpg

மனித ஆண்குறி அளவு என்பது மனிதப் பாலுறுப்பான ஆண்குறியின் நீள அகலங்களைக் குறிக்கிறது. பெரிய ஆண்குறிகள் தொடர்பான ஆர்வம் ஆண்குறிப் பெரிதாக்கம் தொடர்பான தொழிற்துறையையே தோற்றுவித்துள்ளது. உடற் திணிவோடு ஒப்பிடுகையில் சராசரி விலங்குகளை பார்க்க மனித ஆண்குறியே பெரியதாக உள்ளது.

ஆண்குறியை சரியாக அளப்பதற்குப் வெவ்வேறு பல நாட்களில் அளவெடுப்பது பொருத்தமெனக் கருதப்படுகிறது. பின்னர் அவற்றின் சராசரியை ஏற்கலாம். உணர்ச்சி அளவு, நேரம், சூழல் வெப்பநிலை, பாலியற் செயற்பாடுகளின் அளவு போன்ற பலவற்றின் வித்தியாசங்களால் அளவு வேறுபடுவதும் அளக்கும் முறைகளின் நம்பகமின்மையுமே இதற்கான காரணமாகும்.

பொதுவாக மனித ஆண்குறி 12.7 - 15 செ.மீ நீளமானது எனப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_ஆண்குறி_அளவு&oldid=2243597" இருந்து மீள்விக்கப்பட்டது