ஆட்கொல்லி (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆட்கொல்லி புதினத்தின் அட்டைப்பக்கம்

ஆட்கொல்லி (ஒலிப்பு) புதினம் க. நா. சுப்ரமணியத்தால் எழுதப்பெற்றதாகும்.

வெளியீடு[தொகு]

ஆட்கொல்லி, 1952ல் க. நா. சுவால் எழுதப்பட்டது. இது வாராவாரம் தொடராக சென்னை வானொலியில் டி. என். விசுவநாதன் என்பவரால் வாசிக்கப்பட்டது. பின்னர் கலைமகள் காரியாலயத்தால் நூலாக வெளியிடப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப்பின் நற்றிணைப் பதிப்பகத்தால் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது

கரு[தொகு]

ஆட்கொல்லி என்று க. நா. சு சொல்வது பணத்தைத்தான். பணம் சேர்க்கும் மனமோ இயல்போ இல்லாத ராஜா என்பவர் தான் சிறுவயதில் தங்கி வாழ்ந்த தன் மாமா வீட்டு நினைவுகளைச் சொல்கிறார். மாமா வெங்கடாசலமும் அவர் மனைவியும் பணம் ஈட்டுவதை மட்டுமே குறியாகக் கொண்டவர்கள். எவருக்கும் எதுவும் செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் கணக்கு வைத்திருக்கிறார்கள். ஆனால் அதன் விளைவாக மனித உறவுகளையே இழந்து விடுகிறார்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

கந்தாடை நாராயணசாமி ஐயர் சுப்பிரமணியம் பற்றிய குறிப்புரை பரணிடப்பட்டது 2010-09-28 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்கொல்லி_(புதினம்)&oldid=3232760" இலிருந்து மீள்விக்கப்பட்டது