ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கு (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கு என்பது 1999-2000ஆம் ஆண்டு காலத்தில், இந்தியாவின், அரியானா மாநிலத்தில 3206 பள்ளிக்கூட ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு செய்ததாக கருதப்பட்டதால் தொடரப்பட்ட வழக்கு. இது அம்மாநில முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் மீதும் பிற 53 நபர்கள் மீதும், சூன் 2008 அன்று சிபிஐயால் குற்ற வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. ஆசிரியராக நியமிக்க தகுதியற்ற மூவாயிரம் நபர்களை முறைகேடாக அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக தேர்வு செய்தார் என்பதற்காக ஓம்பிரகாஷ் சௌதாலாவிற்கும், அவரது மகன் விஜய்சிங்சிற்கு 16 சனவரி 2013 அன்று தில்லி சிபிஐ நீதிமன்றம் பத்தாண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.[1].[2] .[3][4] சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து, 11 சூலை 2014இல் ஓம்பிரகாஷ் சௌதாலா, தில்லி உயர்நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு தற்போது விசாரணை நிலுவையில் உள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]