ஆசிய மருத்துவர்கள் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிய மருத்துவர்கள் சங்கம் (Association of Medical Doctors of Asia) என்பது ஒரு பன்னாட்டு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.[1] ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஐரோப்பாவில் இயற்கைப் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதையும், அகதிகளுக்கு சிறந்த சுகாதாரத்தை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இயங்குகிறது.

இந்த அமைப்பு சப்பான், இந்தியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களுடன் 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆசிய பன்னாட்டு மருத்துவ தூதரகங்களுடன் இணைந்து செயல்படுகிறது. உள்ளூர் குழுக்களுடன் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மருத்துவ ஊழியர்களும் அகதி முகாமில் ஒன்றாக பணிபுரிகின்றனர்.[2] தாய்லாந்தின் கம்போடியா எல்லையில் இந்த அமைப்பு நிறுவப்பட்டபோது பெரும்பாலும் மேற்கத்திய மருத்துவர்கள் கம்போடியாவில் இருந்து வந்த அகதிகளுடன் வேலை செய்து கொண்டிருந்தனர். பிராந்திய ஆசிய மருத்துவர்கள் பிராந்திய நிவாரண நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என்று அப்போது உணரப்பட்டது.[3]

ஆசிய மருத்துவர்கள் சங்கத்தின் தலைமையகம் சப்பானில் செயல்படுகிறது.[4] நல்கை வழங்குபவர்கள் சுகாதாரம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.[5] சுகாதாரம் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக நேரடி தொலைபேசி இணைப்புகள் இயங்குகின்றன.[6] உள்ளூர் நிறுவனங்கள் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்துகின்றன.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Association Medical Doctor of Asia". www.ccc-cambodia.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.
  2. Farazmand, Ali (2001-06-22). Handbook of Crisis and Emergency Management (in ஆங்கிலம்). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-0245-4.
  3. Hirata, K. (2002-08-16). Civil Society in Japan: The Growing Role of NGO’s in Tokyo’s Aid and Development Policy (in ஆங்கிலம்). Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-10916-2.
  4. "SKNVibes | The Republic of China (Taiwan) celebrates its 103rd National Day". www.sknvibes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.
  5. "In-Depth: Pharma's digital health opportunities". MobiHealthNews (in ஆங்கிலம்). 2014-05-02. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.
  6. NEWS, KYODO. "Hotline service to begin for foreigners in Japan for coronavirus inquiries". Kyodo News+. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.
  7. "'We hope children with Down Syndrome will grow up like any other child'". Dhaka Tribune. 2019-10-27. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.