ஆங்கில்கள்
Appearance
ஆங்கில்கள் (Angles) என்பவர்கள் வடகடல் பகுதிகளில் வாழ்ந்திருந்த செருமானிய மொழிகள் பேசும் இனப்பிரிவினரில் ஒருவராவர். தற்போதைய செருமனியின் இஷ்லேஷ்விக்-ஹோல்ஸ்டீன் மாவட்டத்தின் தொன்மைப்பெயரான ஆங்கெல்ன் என்பதிலிருந்து இவர்கள் பெயர் பெற்றதாக கருதப்படுகிறது. வடகடலைக் கடந்து பிரித்தானியத் தீவின் தற்போதைய இங்கிலாந்து பகுதிகளின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைக் கையகப்படுத்தினர். இவர்களைக் கொண்டே இப்பகுதிக்கு ஆங்கிலேய நாடு எனப்பொருள்படும் இங்கிலாந்து என்ற பெயர் வந்தது.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஆங்கிலேயர்களும் வேல்சு மக்களும் வெவ்வேறு இனப்பிரிவினர்; பிபிசி; 30 சூன், 2002.