ஆக்கர் பண்பாடு
ஆக்கர் பண்பாடு அல்லது ஆக்கர் இயக்கம் (Maker Culture) என்பது தானே செய்தல் பண்பாடு (DIY Culture), கொந்தர்கள் பண்பாடுகளின் (Hacker Culture) நீட்சியாகவும், கலைகளும் கைவினைத் தொழில்கள் இயக்கத்தின் (Arts and Crafts) மீள் உருவாக்கம் ஆகவும் உருவாகிவரும் ஒரு தற்கால உப பண்பாடு அல்லது இயக்கம் ஆகும்.[1] ஏற்கனவே உள்ள பொருட்களை பழுது பார்த்தல்/திருத்துதல், மாற்றியமைத்தல், மீள் பயன்படுத்தல், புதிய பொருட்களை ஆக்குதல், கட்டற்ற முறையில் இந்த நுட்பங்களை அறிவைப் பகிர்ந்துகொள்ளல் இந்தப் பண்பாட்டின் உத்வேகமாகாக இருக்கின்றது. இந்தப் பண்பாட்டில் ஈடுபாடு உடையவர்கள் மின்னணுவியல், தானியங்கியியல், முப்பரிமாண அச்சாக்கம், கருவிகள் உருவாக்கம் போன்ற பொறியியல் துறைகள் சார்ந்த செயற்திட்டங்களிலும், மரவேலை, உலோகவேலை போன்ற மரபுர்சார் தொழிற்கலைகள் சார்ந்த செயற்திட்டங்களிலும் ஈடுபாடு காட்டுகின்றார்கள். இந்தப் பண்பாட்டை ஐக்கிய அமெரிக்க படைத்துறை, சீன அரசு போன்றவை தமது தேவைகளுக்கு ஏற்ப செதுக்கு அல்லது பயன்படுத்தி வருவதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Evgeny Morozov (13 சனவரி 2013). "Making It". The New Yorker. பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)