ஆகாந்தோஃபோலிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆகாந்தோஃபோலிஸ்
புதைப்படிவ காலம்:தொடக்க கிரீத்தாசியக் காலம்
Acanthopholis suposed.jpg
ஓவியர் வரைந்த ஆகாந்தோஃபோலிசின் தோற்றம்.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: சோரோப்சிடா
பெருவரிசை: டயனோசோரியா
வரிசை: ஓர்னித்தீஸ்சிசியா
துணைவரிசை: தைரியோஃபோரா
உள்வரிசை: ஆங்கிலோசோரியா
குடும்பம்: நோடோசோரிடீ
பேரினம்: ஆகாந்தோஃபோலிஸ்
ஹக்ஸ்லி, 1867
இனங்கள்

ஆகாந்தோஃபோலிஸ் (உச்சரிப்பு /ˌækənˈθoʊfəlɨs/) (முள்ளந்தண்டுச் செதில்கள் என்னும் பொருள் கொண்டது) என்பது ஒரு ஆங்கிலோசோரிட் தொன்மாப் பேரினத்தைச் சேர்ந்த விலங்கு. நோடோசோரிடீ குடும்பத்தைச் சேர்ந்த இந்த விலங்கு சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய தொடக்க கிரேத்தீசியக் காலப்பகுதியில் வாழ்ந்தது. இதன் பெயர் இதன் உடலில் பாதுகாப்புக்காக அமைந்துள்ள செதில் போன்ற அமைப்புக்களைக் குறித்து ஏற்பட்டது. இது நாலுகாலியும், தாவர உண்ணியும் ஆகும். இது 3 தொடக்கம் 5.5 மீட்டர் (10 - 18 அடி) நீளமும் 380 கிலோகிராம் (840 இறாத்தல்) எடையும் கொண்டதாக இருந்திருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகாந்தோஃபோலிஸ்&oldid=1374093" இருந்து மீள்விக்கப்பட்டது