அ.பிரதீப்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அ.பிரதீப்குமார்
A. Pradeepkumar
A. PradeepKumar.jpg
அ.பிரதீப்குமார்
கேரள சட்டமன்றம்
பதவியில்
2006 – நடப்பு
பின்வந்தவர் பதவியில்
தொகுதி கோழிக்கோடு வடக்கு
தனிநபர் தகவல்
பிறப்பு 15 மே 1964
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி பொதுவுடமைக் கட்சி, மார்க்சிசுட்டு பிரிவு
வாழ்க்கை துணைவர்(கள்) அகிலா
பிள்ளைகள் ஒரு மகள்

அ.பிரதீப்குமார் (A. Pradeepkumar) 14- ஆவது கேரள சட்டமன்றத்தில் ஓர் உறுப்பினராக உள்ளார். அவர் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசுட்டு) பிரிவையும் மற்றும் கோழிக்கோடு (வடக்கு) சட்டமன்றத் தொகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். முன்னதாக 2006[1] மற்றும் 2011 [2]ஆம் ஆண்டுகளில் இவர் கேரள சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோழிக்கோடைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. ராகவனிடம் பிரதீப்குமார் தோற்றுப் போனார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இந்திய மாணவர் சங்கத்தின் ஒரு மாணவச் செயற்பாட்டாளராக தனது அரசியல் வாழ்க்கையை இவர் தொடங்கினார். சமோரின் குருவாயூரப்பன் கல்லூரி அலகில் (1984-86) இக்கூட்டமைப்பின் செயலாளராக இருந்தார். கோழிக்கோடு பல்கலைக்கழக ஒன்றியத்தின் தலைவராகவும் இவர் இருந்துள்ளார். மேலும் இப்பல்கைலக்கழக ஆலோசனைச் சபையின் உறுப்பினர் (1986–87), கோழிக்கோடு மாவட்ட இந்திய மாணவர் சங்கச் செயலர் (1988–90) போன்ற சிறப்புகளும் இவருக்கு உண்டு. 1992 முதல் 1994 ஆம் ஆண்டு வரை இவர் இந்திய மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார். மேலும், மாவட்ட விளையாட்டு கவுன்சில், கோழிக்கோடு மற்றும் கேரள மாநில மன்றத்தில் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

2016 கேரள சட்டமன்ற தேர்தல்[தொகு]

2016 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கோழிக்கோடு வடக்கு தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.எம்.சுரேசை 27,873 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதீப் குமார் தோற்கடித்தார். [3].

2016 கேரள சட்டமன்றம், கோழிக்கோடு வடக்கு

கட்சி வேட்பாளர் வாக்குகள் சதவீதம் குறிப்பு
பொதுவுடமைக் கட்சி அ. பிரதீப் குமார் 64192 48.78 வெற்றி
இந்திய தேசிய காங்கிரசு பி.எம். சுரேசு பாபு 36319 27.59
பாரதீய சனதா கே.பி.சிறீசன் 29860 22.69

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

1964 மே 15 அன்று பிரதீப் குமார் பிறந்தார். பெற்றோர் கோபாலகிருட்டிண குரூப் மற்றும் கமலாக்சி தம்பதியினர் இவரது பெற்றோர் ஆவர். இளங் கலை பட்டதாரியான பிரதீப் அகிலா என்ற பெண்னை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர் கோழிக்கோட்டின் மேற்கு மலையில் வசிக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ.பிரதீப்குமார்&oldid=2995589" இருந்து மீள்விக்கப்பட்டது