அஸ்வெஸ்ட்ரி குறைபாடுக் குறியீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Oswestry Disability Index

அஸ்வெஸ்ட்ரி குறைபாடுக் குறியீடு என்பது இடுப்பு மற்றும் முதுகு வலிகளின் அளவை மதிப்பிடும் ஒரு மதிப்பீட்டு முறை ஆகும்.

உருவாக்கம் மற்றும் பயன்பாடு[தொகு]

இது பாதிக்கப்பட்டவரிடம் கேள்விகள் கேட்டு மதிப்பிடப்படும். 1980 ஆம் ஆண்டு இயன்முறைமருத்துவத்தில் இது முதன் முதலில் ஜெர்மி பயர்பெங்க் எட் அல் என்பவரால் வெளியிடப்பட்டது. இதன் தற்போதைய வழிமுறை முள்ளந்தண்டு நிரல் சஞ்சிகை மூலம் 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[1][2] [3][4] இம்முறையில் பத்து விதமான கேள்விகள் கேட்கப்படும்.

அவைகள் முறையே:

  1. வலியின் அளவு
  2. பளு தூக்கும் தன்மை
  3. அன்றாட வேலை
  4. நடப்பதால்
  5. உட்காருவதால்
  6. உடலுறவு கொள்ளும்போது
  7. நிற்கும் தன்மை
  8. சமூக வாழ்வு
  9. தூங்கும்போது
  10. பயணம் மேற்கொள்ளும்போது முதலிய தலைப்பின்கீழ் கேள்விகள் கேட்கப்படும்.[2]


ஒவ்வொரு கேள்விகளுக்கும் 6 விதமான மதிப்பீடு வழங்கப்படும். அது 0 முதல் 5 மதிப்பெண் ஆகும். 0 என்பது குறைபாடு இல்லை அல்லது இயலாமை இல்லை என்பதாகும். மதிப்பெண் 5 க்கு செல்லச்செல்ல இயலாமையின் அளவு அதிகமாகும். அணைத்து கேள்விகளின் மொத்த மதிப்பெண்களை கூட்டி இரண்டால் பெருகினால் 100க்கு என்ன மதிப்பெண் என கொள்ளப்படும். இதுவே இயலாமையின் சதவீதம் ஆகும்.[2] அதன் படிநிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு[தொகு]

  • 0% –20%: குறைந்தபட்ச இயலாமை
  • 21%–40%: மிதமான இயலாமை
  • 41%–60%: கடுமையான இயலாமை
  • 61%–80%: முடமாதல்
  • 81%–100%: படுக்கைப்படுக்கையாக[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fairbank JC, Couper J, Davies JB. The Oswestry Low Back Pain Questionnaire. Physiotherapy 1980; 66: 271-273.
  2. 2.0 2.1 2.2 2.3 Fairbank JC, Pynsent PB. The Oswestry Disability Index. Spine 2000 Nov 15;25(22):2940-52
  3. National Council for Osteopathic Research http://www.ncor.org.uk/wp-content/uploads/2012/12/Oswestry-Disability-questionnairev2.pdf
  4. Oswestry Low Back Pain Disability Questionnaire