அவிஜித் ராய்
அவிஜித் ராய் | |
---|---|
இறப்பு | பிப்ரவரி 26, 2015 வங்காளதேசம் |
தொழில் | விமரிசகர், கட்டுரையாளர் மற்றும் பொறியாளர் |
மொழி | வங்காள மொழி மற்றும் ஆங்கிலம் |
தேசியம் | அமெரிக்கர் மற்றும் வங்காளதேசி |
இணையதளம் | |
http://www.mukto-mona.com/ |
அவிஜித் ராய் (ஆங்கிலம்: Avijit Roy, வங்காள மொழி: অভিজিৎ রায়, இறப்பு, 26, 2015) அமெரிக்காவில் வசித்த வங்காளதேசத்தைச் சார்ந்த பொறியாளர் ஆவார். இவர் விமரிசகர் மற்றும் கட்டுரையாளருமாவார். பிப்ரவரி 26, 2015 அன்று கடத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.[1] பகுத்தறிவு மற்றும் இறைமறுப்புக் கொள்கையுடைய இவர் தனது முக்தோ மோனோ (Mukto-Mona) எனும் இணையத்தளத்திற்காகப் பரவலாக அறியப்பட்டார்.
கொலை மிரட்டல்
[தொகு]அவிஜித் ராய் வங்காளதேசத்தின் மனித உரிமைச் செயற்பாட்டாளரான அஜோய் ராய் எனும் தாக்கா பல்கலைக்கழகப் பேரசிரியரின் மகனாவார்.[2] இவருக்கு வங்காளதேச இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர்.[3][4]
படைப்புகள்
[தொகு]இவர் மொத்தம் எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவருடைய பல கட்டுரைகள் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது கடைசி இரண்டு புத்தகங்களான த பிலாசஃபி ஆஃப் டிஸ்பிலீவ் (The Philosophy of Disbelief) மற்றும் த வைரஸ் ஆஃப் பெயித் (The Virus of Faith) ஆகிய புத்தகங்கள் சர்ச்சைக்குள்ளாகி பரவலான கவனத்தைப் பெற்றன.
மரணம்
[தொகு]வங்காளதேசத்தில் நடைபெற்ற எக்குஷே புத்தகக் கண்காட்சிக்கு (Ekushe Book Fair) வந்திருந்தபோது 26, பிப்ரவரி 2015 அன்று கடத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assailants hack to death writer Avijit Roy, wife injured". bdnews24.com (Dhaka). 26 February 2015. http://bdnews24.com/bangladesh/2015/02/26/assailants-hack-to-death-writer-avijit-roy-wife-injured. பார்த்த நாள்: 26 February 2015.
- ↑ http://newagebd.net/98434/blogger-avijit-hacked-to-death-on-du-campus/#sthash.Vp1lYqIQ.dpbs%7Ctitle=Blogger Avijit hacked to death on DU campus|date=26 February 2015|work=New Age|accessdate=26 February 2015|location=Dhaka}}
- ↑ "Bangladesh online bookstore drops author after death threats". ucanews.com. 18 Mar 2014.
- ↑ "Radical lslamists threaten Bangladeshi American Writer Avijit Roy". Policy Research Group Strategic Insight. 6 Apr 2014. Archived from the original on 21 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 27 பிப்ரவரி 2015.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help)