அவார் கான் ஐபக்
அவார் கான் ஐபக் | |
---|---|
ஆட்சியாளர் | சம்சுத்தீன் இல்த்துத்மிசு |
இலக்னௌதி நகரத்தை ஆக்கிரமித்தவர் | |
பதவியில் 1236 | |
முன்னையவர் | சைபுதீன் ஐபக் |
பின்னவர் | துக்ரால் துகன் கான் |
அவார் கான் ஐபக் ( Awar Khan Aibak) மம்ல்லூக்கிய சுல்தான் சம்சுத்தீன் இல்த்துத்மிசின் கீழ் வங்காளத்தின் ( இலக்னௌதி ) ஆளுநராக இருந்தார். துக்ரால் துகன் கான் தூக்கியெறியப்பட்டு இவர் ஆளுநரானார். இவரது ஆட்சி 1236 வரை நீடித்தது.[1]
சுயசரிதை
[தொகு]கான் வங்காள ஆளுநராக இருந்த சைபுதீன் ஐபக்கின் அரசவை உறுப்பினராக இருந்தார். "மிகப்பெரிய தைரியசாலியான துருக்கியர் " என்று வர்ணிக்கப்படும் கான், 1236 இல் சைபுதீனைக் கொன்று, இலக்னௌதியின் அதிகாரத்டைக் கைப்பற்றினார்.[2] சுல்தான் சம்சுத்தீன் இல்த்துத்மிசு இறந்துவிட்டதால் இந்த வாய்ப்பைப் பெற்றதாகக் கருதப்படுகிறது. பீகார் ஆளுநர் துக்ரால் துகன் கான், இலக்னௌதி மாகாணத்தை மீண்டும் தில்லி சுல்தானகத்திடம் ஒப்படைக்குமாறு அவார் கானிடம் கோரினார். இலக்னௌதி நகருக்கும் பாஸ்கோட் கோட்டைக்கும் இடையே நடந்த போரில் இருவரும் போரிட்டனர். போரில் அவார் கான் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். துக்ரால் கான் சுல்தானின் ஆளுநராக வங்காளம் மற்றும் பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்தார்.[1][3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 வார்ப்புரு:Cite Banglapedia
- ↑ KingListsFarEast
- ↑ Nagendra Kr. Singh (2003). Encyclopaedia of Bangladesh (Set of 30 Vols.). Anmol Publications PVT. LTD. p. 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-261-1390-3.