அவளுக்காக ஒரு பாடல் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அவளுக்காக ஒரு பாடல்
நூல் பெயர்: அவளுக்காக ஒரு பாடல்
ஆசிரியர்(கள்): கவிஞர் கண்ணதாசன்
வகை: புதினம்
துறை: {{{பொருள்}}}
இடம்: இந்தியா தமிழ்நாடு
மொழி: தமிழ்
பதிப்பகர்: கண்ணதாசன் பதிப்பகம்


அவளுக்காக ஒரு பாடல் என்ற நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய புதினம் ஆகும். கண்ணதாசன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

நூலின் போக்கு[தொகு]

தன் வாழ்வில் நடந்த சில முக்கிய சம்பவங்களைக் கவிஞர் புதினமாக்கி இருக்கிறார். இந்நூலில் சில இடங்களில், உளவியல் ரீதியாகவும், தத்துவரீதியாகவும் கதை சொல்கிறார்.

கதை மாந்தர்கள்[தொகு]

  • கண்ணதாசன்
  • கிருஷ்ணன்
  • ஆனந்தி
  • அபர்ணா
  • அழகப்பன்
  • பிரவீன் சந்தர்
  • சோமசுந்தரம் செட்டியார்

கதைச்சுருக்கம்[தொகு]

வேலை நிமித்தமாக கொல்கத்தா செல்லும் கண்ணதாசன், அங்கு தன் முதலாளியின் மகன், தன் நண்பனான‌ அழகப்பனுடன் சேர்ந்து சுற்றித்திரிகிறார். அப்போது ஒரு ஹோட்டலில், அபர்ணா என்ற வங்காள அகதியைச் சந்திக்கிறார். அவள் தன் கதையையும், தான் மூன்று பேரால் கற்பழிக்கப்பட்டதையும் கண்ணதாசனிடம் சொல்கிறாள். உடனே, அந்தப் பெண்ணுக்கு உதவ வேண்டும் என அழகப்பனிடம் கூறுகிறார். அந்தப் பெண்ணை, அழகப்பன் தன் நண்பன் பிரவீன் சந்தருக்குக் கட்டிவைக்கிறான். பிரவீன் சந்தரின் அப்பா சொத்தில் பங்கு கேட்டு வரக்கூடாது என்று பிரவீனை விரட்ட, உடனே அவன் கண்ணதாசனுடன் அபர்ணாவை சென்னைக்கு அனுப்புகிறான். தான் வருவதாக‌ முதலில் கடிதப் போக்குவர‌த்தில் அபர்ணாவோடு பிர‌வீன் பேசுகிறான். பின், அறவே நின்றுபோனது. அபர்ணா ஒரு குழந்தை தந்து, இறந்த‌பின்னரே பிரவீன் வந்தான். தான் குழந்தையை வளர்ப்பதாகக் அவனிடம் கூறி, அவனை கொல்கத்தாவிற்கு அனுப்பினார், கண்ணதாசன். பின் கோவைக்கு வந்து, அபர்ணாவின் குழந்தையை வளர்க்கும்போது, தன் அண்ணனின் உதவியால் பாடல் எழுதும் தொழிலைத் துவங்குகிறார். ஒருநாள், கிருஷ்ணன் அழும்போது, ஒரு பெண் தாலாட்டுகிறாள். அவள் ஆன‌ந்தி. காதல் வயப்பட்டு, இருவரும் மணம்புரிந்த மூன்றாம் நாளில் ஆனந்தி இறக்கிறாள். மனம் உடைந்து போகிறார், கண்ணதாசன். கிருஷ்ணன் வள‌ர்ந்து, இராணுவத்தில் சேர்கிறான். தன் தாயைக் களங்கப்படுத்தியோரைப் பழிவாங்குகிறான். கிருஷ்ணன் வந்தபின்னர், ஆன‌ந்திக்காகப் ஒரு பாடல் எழுதுகிறார். யாருக்குமே அந்த பாடலின் விவரம் தெரியாது இன்றுவரை.

மேற்கோள்கள்[தொகு]

[1]

வெளி இணைப்புகள்[தொகு]

"நூலைப்படிக்க"