அழுத்த மையம் (பாய்ம இயக்கவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அழுத்த மையம் (Center of pressure) என்பது அழுத்தப் புலத்தில் இருக்கும் ஒரு பொருளின் மீதிருக்கும் ஒரு புள்ளியாகும், அப்புள்ளியில் அழுத்தப் புலத்தின் மொத்த அழுத்தமும் செயல்படுவதாகக் கருத்தில்கொள்ளப்படுகிறது, இதனால் அப்புள்ளியில் விசை மட்டுமே செயல்புரியும் திருப்புத்திறன் ஏதும் செயல்படாது. அழுத்த மையத்தில் செயல்படும் மொத்த அழுத்தத் திசையன் ஆனது அழுத்தப் புலத்தில் செயல்படும் மொத்த அழுத்தத்தின் தொகையீட்டு மதிப்பாகும். அவ்வாறு தொகையிடப்பட்ட விசையானது, உண்மையில் இருக்கும் அழுத்தப் புலம் அப்பொருள் மீது ஏற்படுத்தும் விசை மற்றும் திருப்புத்திறனை அதே அளவில் ஏற்படுத்துகிறது. நிலை மற்றும் இயக்க பாய்மவியல் ஆகிய இரண்டிலுமே அழுத்தப் புலங்கள் உருவாகின்றன. இவ்வாறு அழுத்த மையப்புள்ளியையும் அதில் செயல்படும் திசையன் பலத்தையும் அறிந்தால், அழுத்தப் புலன் செயல்படும் பொருளின் மீதுள்ள எந்தப்புள்ளியைப் பொறுத்து வேண்டுமாயினும் அழுத்தப் புலத்தால் ஏற்படும் விசை மற்றும் திருப்புத்திறனைக் கணக்கிடலாம்.