அளவைப் பட்டியல்
Appearance
ஒரு கட்டிடத்தையோ, வேறு அமைப்புக்களையோ கட்டுவதென்பது பல்வேறு சிறிய வேலைகளின் ஒரு தொகுதி எனலாம். இவ்வாறான சிறிய வேலைகள் பல, அவற்றுக்குப் பயன்படும் கட்டிடப்பொருட்கள், தொழினுட்பம், தேவைப்படும் வேலையாட்கள், அவர்களுக்கு இருக்கவேண்டிய தகைமைகள் போன்றவை தொடர்பில், வேறு பலவற்றைக் காட்டிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன. ஒரு கட்டுமான வேலையைப் பல கூறுகளாக அல்லது உருப்படிகளாகப் பிரித்துத் தனித்தனியே அவற்றின் கணிய அளவைக் கணித்து அவற்றுடன் பட்டியலிடுவதனால் கிடைக்கும் ஆவணமே, அளவைப் பட்டியல் (Bill of Quantities) எனப்படுகின்றது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bill of quantities (BOQ)". Designing Buildings — The Construction Wiki. Archived from the original on 2 August 2023. பார்க்கப்பட்ட நாள் 2 August 2023.
- ↑ Potts, K. (2004). Quantity Surveying Tools and Techniques - a Review of Client and Contractor Requirements.