அல்-கிந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்-கிந்தி
அல் கிந்ஹியின் வரைதற் படம்
பிறப்புகி.பி. 801
பாஸ்ரா (Basra), ஈராக்
இறப்புகி.பி. 873 (72 வயதில்)
பக்தாத், ஈராக்
காலம்மத்தியக் காலம் (Islamic Golden Age)
பகுதிஈராக், Arab world, Muslim world, world
பள்ளிஇசுலாமிய மெய்யியல்
முக்கிய ஆர்வங்கள்
மெய்யியல், தர்க்கம், கணிதம், மருத்துவம், சோதிடம், இசையியல்.
செல்வாக்குச் செலுத்தியோர்
  • பண்டைய கிரேக்க மெய்யியல்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • அபு சயீத் அல்-பல்கி, அகமத் இபின் அல்-தயூப் அல்-சரக்‌ஷி, ஐசக் இஸ்ரேலி பென் சாலமன், அபு மஷார் அல்-பல்கி, மிஷ்கவாஹ்,[[1] Robert Grosseteste

அல்-கிந்தி (ஆங்கிலம்:Al-Kindi), அரபு: أبو يوسف يعقوب بن إسحاق الصبّاح الكندي)‎ என்பவர் முதலாவது இசுலாமிய மெய்யியலாளர் ஆவார். மேலும் இவர் ஒரு அரேபியர் ஆகையால் மெய்யியல் கற்ற முதல் இசுலாமிய அரேபியர் எனும் பெருமையும் இவைரையே சாரும். இவை கி.பி. 801 ஆம் ஆண்டு ஈராக்கில் பிறந்தவர். தனது 72 ஆவது வயதில் அதாவது கி.பி. 873 ஆன்டு ஈராக் இல் பாக்தாத்தில் இறந்தவர். அத்துடன் இவர் "அரேபியர்களின் மெய்யியலாளர்" எனவும் அழைக்கப்படுகின்றார். கிந்தாஹ் என்பது இஸ்லாத்துக்கு முந்திய அரபுப் பழங்குடியினப் பெயர் ஒன்றைக் குறிக்கிறது. இவரது பாட்ட்டனாரான அல்-அஷா முகமது நபியின் தோழர்களில் ஒருவர். அல் கிந்தி கிரேக்க சிரிய மொழிகளைக் கற்றார். இம்மொழிகளைக் கற்காது, அன்றைய கிரேக்க விஞ்ஞானத்தையும் மெய்யியலையும் கற்க வழி இல்லை. சிரிய மொழியில் அவர் பல நூல்களை மொழிபெயர்ப்பித்தார். Enneads என்ற புளோட்டினஸ் நூலின் மொழி பெயர்ப்பை திருத்தி ஒழுங்குபடுத்தினார்.

அல் கிந்தி ஒரு சிறந்த மருத்துவர். அவரது சொந்த நூல் நிலையம் பெரும் நூல் களஞ்சியமாகக் கருதப்பட்டது. அவர் எழுதிய 300 நூல்கள் 17 தலைப்புகளாகக் தொகுக்கப் பட்டிருக்கின்றது. இவற்றுள் அநேகமானவை அழிந்துவிட்டன. மெய்யியல், அளவியல், இசையியல், வானியல், கணிதவியல், மருத்துவ இயல், இயக்க இயல், உளவியல், அரசியல் முதலிய துறைகளிலேயே அவரின் நூல்கள் அமைந்துள்ளன.

உசாத்துணை நூல்கள்[தொகு]

  1. Adamson, pp.12–13
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-கிந்தி&oldid=3658352" இலிருந்து மீள்விக்கப்பட்டது