அல்லாபோக்தனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்லாபோக்தனைட்டு Allabogdanite
பொதுவானாவை
வகைபாசுபைடு கனிமம்
வேதி வாய்பாடு(Fe,Ni)2P
இனங்காணல்
நிறம்மெல்லிய மஞ்சள்
படிக இயல்புநுண் படிமுறை வளர்ச்சி
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை5-6
மிளிர்வுஉலோகத்தன்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி7.11
மேற்கோள்கள்[1][2]

அல்லாபோக்தனைட்டு (Allabogdanite) ஓர் அரிய பாசுபைடு கனிமம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு (Fe,Ni)2P ஆகும். இக்கனிமம்1997 ஆம் ஆண்டு விண்வீழ் கற்களில் காணப்பட்டது [3][1]. உருசியாவின் சகா குடியரசின் யாகுட்டியாவிலுள்ள ஒனெல்லோ ஆற்று வடிநிலத்தில் காணப்பட்ட ஒனெல்லோ விண்விழ் கல்லில் அல்லாபோக்தனைட்டு கனிமம் காணப்பட்டது. இதனுடன் இரும்பு மற்றும் நிக்கல் தனிமங்களின் கனிமங்களான தேனைட்டு, சிக்ரெய்பெர்சைட்டு, காமாசைட்டு, கிராபைட்டு, அவாருயைட்டு போன்ற கனிமங்கள் கலந்து காணப்பட்டன.

உருசிய நிலவியாலாளர் அல்லாபோக்தனோவாவின் நினைவாக கனிமத்திற்கு அல்லாபோக்தனைட்டு என்று பெயரிடப்பட்டது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Mindat
  2. 2.0 2.1 Webmineral data
  3. Britvin S. N., Rudashevsky N. S., Krivovichev S. V., Burns P. C. and Polekhovsky Y. S. 2002: Allabogdanite, (Fe,Ni)2P, a new mineral from the Onello meteorite: The occurrence and crystal structure. American Mineralogist, 87(8-9), 1245-1249 - [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லாபோக்தனைட்டு&oldid=2700464" இருந்து மீள்விக்கப்பட்டது