உள்ளடக்கத்துக்குச் செல்

அல்போன்சோ கனோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்போன்சோ கனோ
பிறப்பின்போதான் பெயர்கில்லர்மோ லியான் சான் வர்கஸ்
பட்டப்பெயர்(கள்)அல்போன்சோ
பிறப்பு(1948-07-22)22 சூலை 1948
பொகோட்டா, கொலொம்பியா
இறப்பு4 நவம்பர் 2011(2011-11-04) (அகவை 63)
Suárez, Cauca, கொலம்பியா
சார்புகொலம்பியப் புரட்சி ஆயுதப் படை
தரம்கொலம்பியப் புரட்சி ஆயுதப் படைத் தலைவர்
கட்டளைமேற்குத் தொகுதி
போர்கள்/யுத்தங்கள்கொலம்பிய ஆயுதப் போராட்டங்கள்

அல்போன்சோ கனோ (Alfonso Cano, 22 சூலை 1948 – 4 நவம்பர் 2011) ஆகும். இலத்தீன் அமெரிக்காவின் கொலம்பியாவில் பார்க் என்ற மார்க்சிய இடதுசாரிக் குழுவின் தலைவராக அல்போன்சோ கனோ இருந்தார். பார்க் என்பது ஆயுதப் புரட்சியில் நம்பிக்கை கொண்டு போராடிய ஒரு தீவிரவாத அமைப்பாகும்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கொலம்பியாவில் பொகொடாவில் பிறந்த அல்போன்சா கனோ கொலம்பியா தேசியப் பல்கலைக் கழகத்தில் மாந்தவியல் கல்வியைப் படித்தார்[2]. அங்கு பொதுவுடைமை நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியதால் பார்க் என்னும் மார்க்சிய இடது சாரி அமைப்பில் இணைந்தார். பல்கலைக்கழகப் படிப்பை இடையிலேயே கைவிட்டார். தீவிர அரசியலில் இறங்கினார். 1970 இல் பார்க் அமைப்பில் சேர்ந்த அல்போன்சோ கனோ படிப்படியாக உயர்ந்து 2008 ஆம் ஆண்டில் அவ்வமைப்பின் தலைவர் ஆனார்.

அமெரிக்காவிலும் ஐரோப்பியாவிலும் பார்க் அமைப்பு ஒரு அச்சுறுத்தல் அமைப்பாகக் கருதப்பட்டது. கனோ தம் கொள்கைகளிலும் செயல்களிலும் உறுதியாகவும் நெகிழ்ச்சித்தன்மை அற்றவராகவும் இருந்தார்[3]. கொரில்லா போர் முறைகளைப் பரப்பியும் வந்தார். 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாலாம் பக்கலில் கொலம்பிய அரசின் படை இவரைச் சுட்டுக் கொன்றது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.britannica.com/biography/Alfonso-Cano
  2. "Obituary: Alfonso Cano". பிபிசி. 5 November 2011. http://www.bbc.co.uk/news/world-latin-america-15604609. பார்த்த நாள்: 6 November 2011. 
  3. (எசுப்பானியம்) Diario de la resistencia de Marquetalia, Jacobo Arenas, Ediciones Abejón Mono, 1972.
  4. "Top commander of Colombia's FARC group killed: gov't". Xinhua News Agency. 5 November 2011. http://news.xinhuanet.com/english2010/world/2011-11/05/c_131230782.htm. பார்த்த நாள்: 5 November 2011. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்போன்சோ_கனோ&oldid=3860167" இலிருந்து மீள்விக்கப்பட்டது