உள்ளடக்கத்துக்குச் செல்

அல்பெரென் துய்மாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்பெரென் துய்மாசு
பிறப்பு3 நவம்பர் 1992 (1992-11-03) (அகவை 31)
அங்காரா, துருக்கி
பணிநடிகர், வடிவழகர்
செயற்பாட்டுக்
காலம்
2015–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
குப்ரா கெல்கிட் (தி. 2020)

அல்பெரென் துய்மாசு (Alperen Duymaz) (பிறப்பு: 3 நவம்பர் 1992)[1] என்பவர் துருக்கிய நாட்டு நடிகர் மற்றும் வடிவழகர் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு 'ஏசி ஆக்' என்ற தொடர் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து டட்லே கோக் யலஞ்சலர் (2015-2016), போட்ரம் மசாலி (2016-2017),[2][3][4] சுகூர் (2018),[5] ஜெம்ஹேரி (2020), சொன் யாஸ் (2021)[6] போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் துருக்கியில் அறியப்படும் நடிகர் ஆனார். இவர் 2018 ஆம் ஆண்டு 'திரேனிச் கரடே' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[7]

வாழ்க்கை[தொகு]

துய்மாசு 3 நவம்பர் 1992 ஆம் ஆண்டில் துருக்கியில் உள்ள அங்காராவில் பிறந்தார். தனது உயர்நிலைப் பள்ளி ஆண்டுகளில் இசை மற்றும் வடிவழகர் துறையில் ஆர்வம் காட்டினார்.[8] அதை தொடர்ந்து அங்காரா மாநிலத்தில் உள்ள ஹசெட்டெப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றார். 2020 ஆம் ஆண்டு 'குப்ரா கெல்கிட்' என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ALPEREN DUYMAZ". Cem Tatlıtuğ Management. Archived from the original on 1 May 2016. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.
  2. "Alperen Duymaz kimdir?". Vatan. Archived from the original on 12 March 2018. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.
  3. "Oyunculuğun özgür kıldığı adam: Alperen Duymaz". ranini.tv. Archived from the original on 12 March 2018. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.
  4. "Alperen Duymaz: İlgi beni utandırıyor". Hürriyet Daily News. Archived from the original on 12 March 2018. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.
  5. "Çukur'da bomba transfer! Alperen Duymaz Çukur dizisinde". Posta. Archived from the original on 12 March 2018. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.
  6. "Alperen Duymaz'dan zor sahne!". Habertürk. 17 January 2020. பார்க்கப்பட்ட நாள் 22 January 2020.
  7. "Direniş Karatay ekibi filmi anlattı". NTV. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.
  8. "Alperen Duymaz: Oyunculuk büyük bir özgürlük". Haber Türk. Archived from the original on 12 March 2018. பார்க்கப்பட்ட நாள் 12 March 2018.
  9. Bayrak, İsmail (22 January 2020). "Alperen Duymaz, öğretmen sevgilisi Kübra Kelkit ile gizlice evlendi". Hürriyet. பார்க்கப்பட்ட நாள் 22 January 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பெரென்_துய்மாசு&oldid=3859709" இலிருந்து மீள்விக்கப்பட்டது