உள்ளடக்கத்துக்குச் செல்

அல்சீரியா நாட்டுப்பண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kassaman / Tagallit

ஆங்கிலம்: We Pledge
கசாமான்
قَسَمًا (Arabic) / Tagallit (Berber)

 அல்ஜீரியா நாடு கீதம்
எனவும் அறியப்படுகிறதுQassaman
இயற்றியவர்மௌஃப்தி ஜகாரியா, 1955
இசைமொகமது ஃபாசி
சேர்க்கப்பட்டது1962
இசை மாதிரி
கசாமான் (இசைக்கருவியில்)

கசாமான் (Kassaman[1][2] or Qassaman[3] (அரபு மொழி: قَسَمًا‎, "we pledge"; Berber languagesவார்ப்புரு:Lang-ber, "the oath" or "we swear") என்பது அல்சீரியாவின் நாட்டுப்பண் ஆகும். கசாமான் என்ற சொல்லுக்கு எங்கள் உறுதிமொழி அல்லது எங்கள் சத்தியம் என்பது பொருளாகும். மௌஃப்தி ஜகாரியா எழுதிய பாடல் வரிகளுக்கு, எகிப்திய இசையமைப்பாளரான மொகமது ஃபாசி இசையமைத்த வடிவம் தற்போது நடைமுறையில் உள்ளது. பிரான்சு நாட்டிலிருந்து விடுதலைப் பெற்றபிறகு, 1962 ஆம் ஆண்டில் இப்பாடல் நாட்டுப் பண்ணாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வரலாறு[தொகு]

கசாமான் பாடல் வரிகளை எழுதிய மௌஃப்தி ஜகாரியா (இடது), படலுக்கு இசையமைத்த மொகமது ஃபாசி (வலது)

1830 இல் ஒட்டோமான் ஆட்சியின் கீழிருந்த அல்ஜீரியா மீது பிரான்சு படையெடுத்ததுக் கைப்பற்றி, தன் பேரரசின் காலனியாக ஒருங்கிணைத்துக் கொண்டது.[4] அடுத்து வந்த நூற்றாண்டில், காலனிய ஆட்சியின் அடக்குமுறையை உள்ளூர் மக்கள் தாங்கிக்கொண்டனர் மேலும் அவர்களுக்கு எந்த அரசியல் உரிமைகளும் வழங்கப்படவில்லை.[5] இதன் விலைவாக 1920இல் தேசிய இயக்கம் தோன்றியது. இது இரண்டாம் உலகப் போருக்குப்,[6] பின்னர் வலுப்பெற்றது. பிரெஞ்சு அல்ஜீரியாவுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படாமல் தட்டிக்கழிக்கப்பட்டு வந்தது.[7] அல்ஜீரிய மக்கள் கட்சியில் இணைந்தார் கவிஞான மௌஃப்தி ஜகாரியா,[8] இவர் ஒரு மொசாப்பிட் பேர்பர் ஆவார்.[9][10] இந்த இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்தார் இவர்.[11] இவர் 1920 மற்றும் 1962 க்கு இடைபட்டக் காலங்களில் பலமுறை சிறைபடுத்தப்பட்டு, சித்திரவதைக்கு ஆளானார். இவ்வாறு சிறைப்படுத்தப்பட்ட 1955 ஏப்ரல் மாதத்தில்,[12][13] "கசாமான்" என்ற பாடலை இவர் இயற்றினார். இவர் அடைக்கப்பட்ட பார்பெரோஸ்ஸ் சிறையில் காகிதம் போன்ற எழுது பொருட்களுக்கு அனுமதி இல்லை என்பதால், ஜகாரியா சிறைச் சுவர்களில் தனது இரத்தத்தினால் பாடலை எழுதியதாக கூறப்படுகிறது.[14][15] பின்னர் இப்படலுக்கு மொகமது ஃபாசி இசையமைத்தார், இதற்கு இசையமைக்க முகமது ட்ரிக்கி என்ற இடையமைப்பாளரும் முயற்சி மேற்கொண்ட நிலையில், மொகமது ஃபாசியின் இசை ஏற்கப்பட்டு, முகமது ட்ரிக்கியின் இசை நிராகரிக்கப்பட்டது.

1962 இல் இந்தப் பாடலும், இசையும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன; அதே ஆண்டு, எயியன் உடன்படிக்கையின்படி அல்ஜீரியர்களின் விடுதலைக் கோரிக்கைக்க குறித்து நடத்தப்பட்ட பொதுசன வாக்கெடுப்பில் விடுதலைக்கு ஆதரவான வான கோரிக்கை வெற்றிபெற்றது. "கசாமான்" தற்காலிக தேசிய கீதமாக ஏற்கப்பட்டது என்றாலும், இது இன்றுவரை நீடித்துவருகிறது.[16]

பாடல் குறித்து[தொகு]

கசாமான் பாடலானது ஒரு போர்ப் பாடல் போன்று உள்ளது. இப்பாடலானது தேசிய முன்னணி முன்னணியின் நடவடிக்கைகள், ஆயுதப் போராட்டம் போன்றவையே, விடுதலையை வென்றெடுப்பதற்கான ஓரே வழி என்னபதை வலியுறுத்துவதாக உள்ளது. இப்பாடலில் சில வரிகள், பிரான்சு நாட்டுக்கு எதிராக அமைந்துள்ளன. அல்ஜீரியாவின் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளர்களின் "தீர்ப்பு நாள்" எப்படி வரும் என்பதை பாடல் ஆரூடம் கூறுவதாக உள்ளது. பாடலின் தன்மையானது திரும்பத்திரும்ப ஒரேமாதிரியாக இருப்பதாக சில விமர்சகர்கள் குறை கூறுகின்றனர்.

சட்டப் பாதுகாப்பு[தொகு]

1962 ஆம் ஆண்டில் "கசாமான்" ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், 2008 நவம்பரில்தான் இது அல்ஜீரியாவின் அரசியலமைப்பின் ஐந்தாவது திருத்தத்தில் "மாறாதது" என்று அறிவிக்கப்பட்டது, இது நாட்டின் புரட்சியில் இணைந்திருப்பதைக் காட்டுகிறது. மேலும் இந்த தேசிய கீதத்தின் அனைத்து வரிகளும் உள்ளடக்கியது என்றும், இன்றைய நாளிலும் பிரான்சிற்கு எதிரான வரிகளைக் கொண்டுள்ளது பொருத்தமானதா எனவும் விவாதிக்கப்பட்டது.

பாடல் வரிகள்[தொகு]

அரபு மொழியில் பாடல் வரிகள்பாடலின் தமிழாக்கம்
قـــسما بالنازلات الـماحقات
والـدماء الـزاكيات الطـــاهرات
والبــنود اللامعات الـخافقات
في الـجبال الشامخات الشاهقات
نحن ثــرنـا فحــياة أو مـمات
وعقدنا العزم أن تـحيا الجـزائر
فاشهدوا ... فاشهدوا ... فاشهدوا
نحن جند في سبيل الـحق ثرنا
وإلى استقلالنا بالـحرب قـــمنا
لـم يكن يصغى لنا لـما نطــقنا
فاتــخذنا رنة البـارود وزنـــــا
وعزفنا نغمة الرشاش لــــحنا
وعقدنا العزم أن تـحيا الجزائر
فاشهدوا ... فاشهدوا ... فاشهدوا
يا فرنسا قد مضى وقت العتاب
وطويناه كــما يطوى الكـــتاب
يا فرنسا إن ذا يوم الـحــساب
فاستعدي وخذي منــا الجواب
إن في ثــورتنا فصل الـخطاب
وعقدنا العزم أن تـحيا الجزائر
فاشهدوا ... فاشهدوا ... فاشهدوا
نحن من أبطالنا ندفع جنــــــدا
وعلى أشـلائنا نصنع مجــــدا
وعلى أرواحنا نصعد خـــــلدا
وعلى هامــاتنا نرفع بنــــــدا
جبهة التـحرير أعطيناك عـهدا
وعقدنا العزم أن تـحيا الجزائر
فاشهدوا ... فاشهدوا ... فاشهدوا
صرخة الأوطان من ساح الفدا
اسـمعوها واستجــيبوا للنــــدا
واكـــتبوها بـــدماء الــشهــداء
واقرأوهــا لبني الـجـيل غــــدا
قد مددنا لـك يا مـــجد يــــدا
وعقدنا العزم أن تـحيا الجزائر
فاشهدوا ... فاشهدوا ... فاشهدوا
பேரழிவு மின்னல் வழியே, நாம் உறுதி ஏற்கிறோம்
புனித மணமிக்க உதிரத்தின் வழியே,
ஒளிரும் தடதடக்கும் கொடியின் வழியில்
நெடிதான கம்பீரமான மலைகளில் இருந்து
வாழ்விலும் சாவிலும் புரட்சிக்கு எழுந்து விட்டோம்
அல்சீரியா வாழ வேண்டும் என்று நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம்
நாங்கள் சாட்சியமாகிறோம்... சாட்சியமாகிறோம்... சாட்சியமாகிறோம்!
அறத்தின் பெயரால் மறவர்கள் நாங்கள் போராடுகிறோம்
விடுதலைப் போருக்காக எழுந்து விட்டோம்.
நாங்கள் பேசினால் யாருமே கேட்பதில்லை
எனவே நாம் துப்பாக்கியை எங்கள் தாளமாக எடுத்துக்கொண்டோம்.
இயந்திரத் துப்பாக்கி ஓசையே எங்கள் மெல்லிசைப் பாடல்.
அல்சீரியா வாழ வேண்டும் என்று நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம்
நாங்கள் சாட்சியமாகிறோம்... சாட்சியமாகிறோம்... சாட்சியமாகிறோம்!
ஓ பிரான்சு நாடே... (எங்கள்) இழிவு காலம் முடிந்துவிட்டது,
ஒரு புத்தகம் முடிவடைந்து விட்டது
ஓ பிரான்சு, தீர்ப்பு நாள் (எங்கள்) கைகளில் உள்ளது
எங்கள் பதிலைப் பெற தயாராகு!!
எமது புரட்சி வெற்று வார்த்தைகளுக்கு முடிவாக இருக்கும்;
அல்சீரியா வாழ வேண்டும் என்று நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம் -
நாங்கள் சாட்சியமாகிறோம்... சாட்சியமாகிறோம்... சாட்சியமாகிறோம்!
எம் நாயகர்களிடம் இருந்து ஒரு படையை உருவாக்குவோம்,
எம் அமரர்கள் மீது எமது பெருமையை நிலைநாட்டுவோம்,
என் உணர்வுகள் அழிவற்றதாய் நிலையாய் உயர்ந்து நிற்கும்
எங்கள் வீரர்கள் மீது எமது (வாழ்க்கை) தரம் நிமிர்ந்து நிற்கும்.
தேசிய விடுதலை முன்ணணிக்கு நாங்கள் உறுதி ஏற்று இருக்கிறோம்,
அல்சீரியா வாழ வேண்டும் என்று நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம் -
நாங்கள் சாட்சியமாகிறோம்... சாட்சியமாகிறோம்... சாட்சியமாகிறோம்!
போர்க்களத்தில் இருந்து தந்தை நாட்டின் (அழு)குரல் கேட்கிறது.
கேளுங்கள்; அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்!
ஈகியரின் குருதியால் அது எழுதப் படட்டும்
எதிகால தலைமுறையால் அது வாசிக்கப்படட்டும்.
ஓ, பெருமை, நாங்கள் உனக்காக எங்கள் கைகளை விரித்து,
அல்சீரியா வாழ வேண்டும் என்று நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம் -
நாங்கள் சாட்சியமாகிறோம்... சாட்சியமாகிறோம்... சாட்சியமாகிறோம்!

மேற்கோள்கள்[தொகு]

 1. "Algeria". The World Factbook. CIA. 8 May 2017. Archived from the original on 30 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 30 May 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
 2. DiPiazza, Francesca Davis (1 January 2007). Algeria in Pictures. Twenty-First Century Books. p. 69. பார்க்கப்பட்ட நாள் 29 May 2017.
 3. Hadjab, Warda (2016). "Algiers–Paris Round Trips: Diasporic Pathways of a Public Civil Dissidence". Journal of Immigrant & Refugee Studies 14 (3): 322. doi:10.1080/15562948.2016.1208315. 
 4. "Algeria – History". Encyclopedia Britannica. (21 April 2017). Encyclopedia Britannica, Inc.. அணுகப்பட்டது 30 May 2017. 
 5. "Algeria – History". Worldmark Encyclopedia of Nations (12th). (2007). Thomson Gale. 
 6. McDougall, James (2007). "Algeria". Encyclopedia of Western Colonialism since 1450 (1st). Macmillan Publishers USA. 
 7. "Algerian War". Encyclopedia Britannica. Encyclopedia Britannica, Inc.. அணுகப்பட்டது 30 May 2017. 
 8. Africa since 1914: a historical bibliography. ABC-CLIO Information Services. 1985. p. 66. பார்க்கப்பட்ட நாள் 30 May 2017.
 9. Marks, Jon (14 December 2015). "Chapter 4: Opposing aspects of colonial rule in this century to 1930: the unusual case of the Beni Mzab". In Joffé, George (ed.). North Africa: Nation, State, and Region. Routledge. p. 68. பார்க்கப்பட்ட நாள் 30 May 2017.
 10. Proglio, Gabriele, ed. (7 March 2017). Decolonising the Mediterranean: European Colonial Heritages in North Africa and the Middle East. Cambridge Scholars Publishing. p. 70. பார்க்கப்பட்ட நாள் 30 May 2017.
 11. Aissaoui, Rabah (30 March 2009). Immigration and National Identity: North African Political Movements in Colonial and Postcolonial France. I.B. Tauris. p. 31. பார்க்கப்பட்ட நாள் 30 May 2017.
 12. ""Kassaman," Anthem to the Glory of Algerian Revolution". Algeria Press Service. Algiers. 5 July 2012 இம் மூலத்தில் இருந்து 21 ஜனவரி 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180121000002/https://www.highbeam.com/doc/1G1-295721480.html. பார்த்த நாள்: 30 May 2017. 
 13. Naylor, Phillip C. (7 May 2015). Historical Dictionary of Algeria. Rowman & Littlefield. p. 553. பார்க்கப்பட்ட நாள் 30 May 2017.
 14. Marshall, Alex (28 August 2015). "Alex Marshall: Flower of Scotland nation’s choice". The Scotsman (Edinburgh) இம் மூலத்தில் இருந்து 30 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170530064936/http://www.scotsman.com/news/opinion/alex-marshall-flower-of-scotland-nation-s-choice-1-3872040. பார்த்த நாள்: 30 May 2017. 
 15. Burnton, Simon (9 June 2014). "Every 2014 World Cup national anthem reviewed by a pop star!". The Guardian (London). https://www.theguardian.com/football/2014/jun/09/2014-world-cup-national-anthem-review-pop-star. பார்த்த நாள்: 30 May 2017. 
 16. Branche, Raphaëlle (2011). "The martyr's torch: memory and power in Algeria". The Journal of North African Studies 16 (3): 432, 441. doi:10.1080/13629387.2010.550138. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்சீரியா_நாட்டுப்பண்&oldid=3927284" இலிருந்து மீள்விக்கப்பட்டது