அலெக்சாண்டர் வில்லியம் வில்லியம்சன்
அலெக்சாண்டர் வில்லியம் வில்லியம்சன் | |
---|---|
அலெக்சாண்டர் வில்லியம் வில்லியம்சன் | |
பிறப்பு | 1 மே 1824 வாண்ட்ஸ்வொர்த், இலண்டன், இங்கிலாந்து |
இறப்பு | 6 மே 1904 இண்ட்ஹெட், சர்ரே, இங்கிலாந்து |
அடக்கத் தலம் | புரூக்வுட் சிமிடெரி 51°17′51″N 0°37′32″W / 51.297390°N 0.625679°W |
தேசியம் | பிரித்தானியர் |
கல்வி கற்ற இடங்கள் | கியெசென் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | லியோபோல்ட் கிமெலின் ஜஸ்டிஸ் வான் லீபிக் |
அறியப்படுவது | ஈதர் தயாரிப்பு தொகுப்பு முறை |
விருதுகள் | இராயல் பதக்கம் (1862) |
பேராசிரியர் அலெக்சாண்டர் வில்லியம் வில்லியம்சன் (Alexander William Williamson) (இராயல் சொசைட்டியின் உறுப்பினர்) (1 மே 1824 – 6 மே 1904)[1] இசுகாட்டிசு பரம்பரையில் வந்த இங்கிலாந்தில் பிறந்த வேதியியலறிஞர் ஆவார். இவர் விலலியம்சன் ஈதர் தொகுப்பு முறைக்காக நன்கறியப்பட்டவர் ஆவார்.
வாழ்க்கை
[தொகு]வில்லியம்சன் இலண்டனில் வேண்ட்ஸ்வொர்த்தில் 1824 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் அலெக்சாண்டர் வில்லிம்சன் மற்றும் ஆண்டனியா மெக்ஆண்ட்ரூ ஆகியோரின் மூன்று குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை அலெக்சாண்டர் வில்லியம்சன் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தில் எழுத்தராகப் பணிபுரிந்தார். இவரது தாயார் இலண்டனில் உள்ள ஒரு தலையாய வணிகரின் மகளாவார். தனது ஒரு கண்ணில் பார்வைக்குறைபாடு மற்றும் பெரும்பகுதி பயனற்ற இடது கை போன்ற உடலியக்கக் குறைபாடுகள் இருந்தபோதிலும் வில்லியம்சன் அக்கறையும், ஊக்குவித்தலும் நிறைந்த ஒரு அறிவார்ந்த சூழலில் வளர்ந்தார். முன்குழந்தைப் பருவம் பிரிங்டனிலும், அதன் பின்னர் கெனிங்ஸ்டனில் உள்ள பள்ளிகளிலும் கழிந்த பின்னர் 1841 ஆம் ஆண்டில் வில்லியம்சன் ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார். ஐடெல்பெர்கில் லியோபெர்டு கிமெலினின் கீழ் பணிபுரிந்த பின்னர், இவர் ஜஸ்டன் வான் லீபிக் உடன் கியெசென் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய மாற்றப்பட்டார். இந்தத் தருணத்தில், 1845ஆம் ஆண்டில் இவர் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். பாரிஸ் நகரில் ஆகஸ்ட் கோம்ட் என்பவரிடம் உயர் கணிதத்தைப் படிப்பதில் மூன்று ஆண்டுகளைச் செலவிட்டார்.[2][3]
1849 ஆம் ஆண்டில், இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் வேதியியலாளர் தாமசு கிரகாம் உதவியுடன், வில்லியம்சன் பகுப்பாய்வு மற்றும் செய்முறை வேதியியல் பாடத்திற்கான உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1855 ஆம் ஆண்டில் கிரகாம் பதவி விலகியதிலிருந்து, 1887 ஆம் ஆண்டில் வில்லியம்சனின் பணி ஓய்வு வரை அங்கு பணிபுரிந்தார். வில்லியம்சன் பொது (கருத்தியல்) வேதியியல் துறையின் தலைவர் பதவியினையும் அவர் வகித்து வந்தார். [2]
இதன் காரணமாக தனது வருவாய் அதிகரித்த பின்னர்,[2]1855 ஆம் ஆண்டில், தாமசு ஹெவிட் கீ என்பவரின் மூன்றாவது மகளான தாமசு கேத்தரீன் கீ என்பவரை மணந்து கொண்டார். [1] இவர்களுக்கு ஆலிவர் கீ மற்றும் ஆலிஸ் மௌட் ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர். [2] ஆலிசு மௌட் வில்லியம்சன் இயற்பியலாளர் ஆல்பிரட் என்றி பிசனை மணந்தார்.
வில்லியம்சன் 1904 ஆம் ஆண்டு மே 6 ஆம் நாள் இங்கிலாந்தின் சர்ரேயில் ஹாஸ்லெமெர் அருகில் உள்ள ஷாட்டெர்மில்லில் ஹைபிட்போல்டு எனுமிடத்தில் இறந்தார். புரூக்வுட் சிமெடெரியில் இவரது உடல் எரியூட்டப்பட்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "WILLIAMSON, Alexander William". Who's who biographies, 1901. 1901. p. 1197.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Williamson Papers". University College London Special Collections.
- ↑ Foster, G. Carey (1911). "Gedächtnisfeier: Alexander William Williamson". Berichte der Deutschen Chemischen Gesellschaft 44 (3): 2253–2269. doi:10.1002/cber.19110440339. https://zenodo.org/record/1426457.
- ↑ Harris, J.; Brock, W. H. (1978). "From Giessen to Gower Street: Towards a Biography of Alexander William Williamson (1824–1904)". Annals of Science (Taylor & Francis) 31 (2): 95–130. doi:10.1080/00033797400200171.