அலுமினியம் ஆர்செனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலுமினியம் ஆர்செனேட்டு
Aluminum arsenate
இனங்காட்டிகள்
13462-91-4 Y
InChI
  • InChI=1S/Al.AsH3O4/c;2-1(3,4)5/h;(H3,2,3,4,5)/p-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 57351442
SMILES
  • [O-][As](=O)([O-])[O-].[Al]
பண்புகள்
AlAsO4
வாய்ப்பாட்டு எடை 165.901 g/mol
தோற்றம் வெண்பளிங்குகள்
அடர்த்தி 3.25 g/cm3
உருகுநிலை 1,000 °C (1,830 °F; 1,270 K)
கரையாது.
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.596
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுங்கோணம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-1431.1 kJ/mol
நியம மோலார்
எந்திரோப்பி So298
145.6 J/mol K
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அலுமினியம் ஆர்செனேட்டு (Aluminium arsenate) என்பது AlAsO4[1] என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மமாகும். பொதுவாக இது ஓர் எண்ணெட்டு நீரேறியாகக் (octahydrate) காணப்படுகிறது. சோடியம் ஆர்செனேட்டும் கரையக்கூடிய அலுமினியம் உப்பு ஒன்றும் இணைந்து நிறமற்ற திடப்பொருளான அலுமினியம் ஆர்செனேட்டை உருவாக்குகின்றன. இயற்கையில் அலுமினியம் ஆர்செனேட்டு மான்சுஃபீல்டைட் (AlAsO4 2H2O)[2] என்ற தாதுவாகக் கிடைக்கிறது. அலுமினியம் ஆர்செனேட்டின் செயற்கை நீரேறியான Al2O3.3As2O5.10H2O வெப்பநீர்ம முறை மூலமாக உருவாக்கப்படுகிறது.[3]

அலுமினியம் ஆர்த்தோஆர்செனேட்டின் வெவ்வேறு மாதிரிகளை வெவ்வேறு வெப்பநிலைகளில் சூடுபடுத்துவதன் மூலமாக படிக வடிவமுள்ள உப்புக்களையும் படிக வடிவமற்ற உப்புகளையும் தயாரிக்கலாம்.[4] AlAsO4.3.5H2O[5] என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட கரையும் ஆர்செனேட்டின் உற்பத்தி 10-18.06 என்ற அளவில் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. காலியம் ஆர்செனேட்டு, போரான் ஆர்செனேட்டு ஆகியவற்றைப் போல இதுவும் α-குவார்ட்சு-வடிவைப் பெற்றுள்ளது.

இதன் உயர் அழுத்த வடிவம் அலுமினியம் மற்றும் ஆர்செனிக் ஆகியவை உரூத்தைல் வகையிலான ஆறு ஆயங்களைக் கொண்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Aluminum arsenate at Chemister
  2. Chemistry of Arsenic, Antimony, and Bismuth, Edited by N. C. Norman. page 131,
  3. http://www.minsocam.org/ammin/AM39/AM39_1005.pdf
  4. B. Sharan "A new modification of aluminum ortho-arsenate" Acta Cryst. 1959, vol. 12, 948-949. {{doi:10.1107/S0365110X59002729}}
  5. Fernando L. Pantuzzo, Luciano R.G. Santos, Virginia S.T. Ciminelli "Solubility-product constant of an amorphous aluminum-arsenate phase (AlAsO4·3.5H2O) AT 25 °C" Hydrometallurgy Volumes 2014, 144–145, Pages 63–68. எஆசு:10.1016/j.hydromet.2014.01.001
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமினியம்_ஆர்செனேட்டு&oldid=2748504" இலிருந்து மீள்விக்கப்பட்டது