உள்ளடக்கத்துக்குச் செல்

அலி இப்னு அல்-ஆதிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபு அல்-அசன் அலி இப்னு முகம்மத் இப்னு முகம்மத் அசுசாய்பனி என்பவர் ஒரு அரபு[1] அல்லது குர்து[2] இன வரலாற்றாளர் மற்றும் சுயசரிதையாளர் ஆவார். இவர் பொதுவாக அலி இலிசு அல்-தின் இப்னு அல்-ஆதிர் அல் சசாரி (அரபி: علي عز الدین بن الاثیر الجزري) (1160-1233) என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் அரபு மொழியில் எழுதினார். இப்னு ஆதிர் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் தனது 21ஆம் வயதில் தன் தந்தையுடன் மொசூல் நகரத்தில் தன் படிப்பை தொடர்வதற்காக வசிக்க ஆரம்பித்தார். அங்கு வரலாறு மற்றும் இசுலாமிய பாரம்பரியத்தை கற்றார்.

இவரது முக்கியமான நூல் அல்-கமில் பி அத்-தரிக் (முழு வரலாறு) என்று அழைக்கப்படும் உலகத்தின் வரலாறு ஆகும். இதில் மொத்தம் 11 பாகங்கள். 3ஆவது பாகம் மங்கோலியத் தாக்குதலைப் பற்றியதாகும். இப்பாகம் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சூன் 2014இல், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன செய்திப்படி, இவரது மொசூலில் உள்ள இவரது கல்லறையானது இசுலாமிய அரசு தீவிரவாத அமைப்பின் அல் கொய்தா பிரிவால் சேதப்படுத்தப்பட்டது.[3]

உசாத்துணை

[தொகு]
  1. a. Historiography of the Ayyubid and Mamluk epochs, Donald P. Little, The Cambridge History of Egypt, Vol.1, ed. M. W. Daly, Carl F. Petry, (Cambridge University Press, 1998), 415. b. Ibn al-Athir, The A to Z of Islam, ed. Ludwig W. Adamec, (Scarecrow Press, 2009), 135. c. Peter Partner, God of Battles: Holy wars of Christianity and Islam, (Princeton University Press, 1997), 96. d. Venice and the Turks, Jean-Claude Hocquet, Venice and the Islamic world: 828–1797, edited by Stefano Carboni, (Editions Gallimard, 2006), 35 n17. e. Marc Ferro, Colonization: A Global History, (Routledge, 1997), 6. f. Martin Sicker, The Islamic World in Ascendancy: From the Arab Conquests to the Siege of Vienna, (Praeger Publishers, 2000), 69.
  2. 1. Philip G. Kreyenbroek , Oral Literature of Iranian Languages al-Athir..a historian and biographer of Kurdish origin 2. Yasir Suleiman, "Language and identity in the Middle East and North Africa", Curzon Press, 1996, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0700704108, p. 154. Ibn al-Athir, (d.1233), a Kurdish historian and biographer...
  3. Isra' al-Rubei'i. "Iraqi forces ready push after Obama offers advisers." Reuters, June 20, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_இப்னு_அல்-ஆதிர்&oldid=3453932" இலிருந்து மீள்விக்கப்பட்டது