அலிப் லைலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலிப் லைலா
வகைகனவுருப்புனைவு
மூலம்ஆயிரத்தொரு இரவுகள்
திரைக்கதைஇராமானந்த் சாகர்
இயக்கம்
  • ஆனந்த் சாகர்
  • பிரேம் சாகர்
  • மோதி சாகர்
முகப்பு இசைஇரவீந்திர ஜெயின்
முகப்பிசைகிருஷ்ணா எம். குப்தா
முற்றிசைகிருஷ்ணா எம். குப்தா
பிண்ணனி இசைஇரவீந்திர ஜெயின்
நாடுஇந்தியா
மொழி
பருவங்கள்1
அத்தியாயங்கள்143
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சுபாஷ் சாகர்
ஓட்டம்23 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சாகர் ஆர்ட்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைடிடி நேசனல்
ஒளிபரப்பான காலம்1993 (1993) –
1997 (1997)

அலிப் லைலா என்பது அரேபிய இரவுகள் என்று அறியப்படும் ஆயிரத்தொரு இரவுகள் கதைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு இந்தியத் தொலைக்காட்சித் தொடராகும்.[1] இத்தொடரை சாகர் ஆட்ஸ் நிறுவனம் தயாரித்தது.[2] இது இரண்டு பருவங்களாகத் தயாரிக்கப்பட்டது. டிடி நேசனல் தொலைக்காட்சியில் 1993ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரை 143 அத்தியாயங்களாக இத்தொடர் ஒளிபரப்பப்பட்டது.

அரசன் சரியாருக்கு அரசி சரசத் கதைகளைக் கூறுவதிலிருந்து இத்தொடரின் கதை தொடங்குகிறது. ஆயிரத்தொரு இரவுகள் கதைகளில் இருந்து நன்றாக அறியப்பட்ட மற்றும் குறைந்த அளவே அறியப்பட்ட கதைகளை இத்தொடர் கொண்டிருந்தது. ஆயிரத்தொரு இரவுகள் என்பது அரபு மொழியில் அலிப் லய்லா வா-லய்லா என்று உச்சரிக்கப்படுகிறது. இதன் சுருக்கமே இத்தொடரின் பெயராக அலிப் லைலா என்று வைக்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிப்_லைலா&oldid=3532279" இலிருந்து மீள்விக்கப்பட்டது