அலவன் ஆட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளையில் இருக்கும் நண்டுகளை வெளியில் வரச்செய்து அவை நடந்தோடுவதை வேடிக்கை பார்த்து மகிழ்தல் சங்ககாலப் பருவப்பெண்களின் விளையாட்டுகளில் ஒன்று.

கடற்கரை மணலில் சிற்றில் புனந்து விளையாடிய மகளிர் ஆயம், தம் தழையாடை குலுங்க ஓடி, தாழை மரத்து அடியிலிருந்து கடலலை அடித்துவந்து தள்ளிய செந்நண்டுகள் ஓடுவதை வேடிக்கை பார்ப்பார்களாம். [1]

கடற்கரை மணலில் ஓரை விளையாடும் மகளிரைக் கண்டு அஞ்சி ஈர நண்டு கடலுக்குள் ஓடிவிடுமாம்.[2]

முள்ளி வேரைக் கையில் வைத்துக்கொண்டு சங்ககால மகளிர் காதலனுடன் களவன் வகை நண்டை ஓடியாடச் செய்து வேடிக்கைப் பார்ப்பார்களாம். [3]

இவற்றையும் பார்க்க[தொகு]

சங்ககால விளையாட்டுகள்

அடிக்குறிப்பு[தொகு]

  1. வரிபுனை சிற்றில் பரி சிறந்து ஓடி
    புலவுத்திரை உதைத்த கொடுந்தாட் கண்டல்
    செம்போர் இரணை அலவன் பார்க்கும்
    சிறுவிளையாடல் - நற்றிணை 123

  2.  
    நீர்வார் கூந்தல்
    ஓரை மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு
    கடலில் பரிக்கும் - குறுந்தொகை 401

  3. முள்ளி வேர் அளைக் களவன் ஆட்டிப்
    பூக்குற்று எய்திய புனலணி ஊரன் - ஐங்குறுநூறு 23
     

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலவன்_ஆட்டல்&oldid=3208365" இலிருந்து மீள்விக்கப்பட்டது