அறிவியல் பயில்வுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிவியல் பயில்வுகள் (Science studies) ஒரு பலதுறை ஆராய்ச்சிப் புலமாகும். இப்புலம் அறிவியல் புலமையை அகன்ற சமூகவியல் வரலாற்றியல்,மெய்யியல் சூழல்களில் ஆய்வு செய்கிறது. இது இது அறிவியல் அறிவின் உருவாக்கம், உருவகப்படுத்தல், வரவேற்பு, அதன் அறிதலியல் குறியியல் பாத்திரம் ஆகியவற்றைப் பயில பல்வேறு முறைகளைப் பயன்கொள்கிறது.

பண்பாட்டுப் பயில்வுகளைப் போலவே, அறிவியல் பயில்வுகள் தன் ஆராய்ச்சிக் கருப்பொருளை வரையறுப்பதோடு அகல்விரிவானதும் பல்வேறுபட்ட்துமான கோட்பாடு, முறையியல்சார் கண்ணோட்டங்களையும் நடைமுறைகளையும் உள்ளடக்குகிறது. இதன் துறையிடை அணுகுமுறை மாந்த வாழ்வியல், இயற்கை, முறைசார் அறிவியல் புலங்கள், அறிவியல்சார் அளவையியல், இனக்குழு முறையியல், அறிதல் அறிவியல் ஆகிய புலங்களை உள்ளடக்குவதோடு அவற்றின் முறைகளையும் தன்மயப் படுத்திக்கொள்கிறது. அறிவியல் பயில்வுகள் மதிப்பீட்டுக்கும் அறிவியல் கொள்கை வகுப்புக்கும் இன்றியமையாத்தாகும் அறிவியல், தொழில்நுட்பம், சமூகப் புலத்தோடு உறவுள்ள நிலையில் இத்துறையைப் பயில்வோரும் நடைமுறயாளர்களும் அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையில் அமையும் உறவையும் வல்லுனர் அறிவுக்கும் பொதுமக்கள் அறிவுக்கும் உள்ள உறவையும் இடைவினையையும் ஆய்வு செய்கின்றனர்.

புலமைப் பரப்பு[தொகு]

இந்தப் புலம் முதலில் மணிபூரகம் நோக்குதல் எனப்படும் (தொப்புள் நோட்டமிடும் போக்கு) யோகமுறையில் இருந்து தொடங்கியதாகக் கருதப்படுகிறது: இது தன் தோற்றத்திலும் பயன்பட்டிலும் முழு நனவுடனே செயல்பட்ட புலமாகும். தொடக்கத்தில் அறிவியலின் நடையில் கவனம் செலுத்தியது. பின் இதன் நடைமுறையாளர்கள் அறிவியல் அறிவுக்கும் வல்லமைக்கும் அரசியலுக்கும் பொதுமக்களுக்கும் உள்ள உறவை ஆய்வதில் கவனம் செலுத்தலாயினர். நடைமுறை எடுத்துகாட்டுகளாக, உயிர் அறவியல், மாட்டு பஞ்சன்ன மூளைநோய், மாசுறல், கோளக வெதுவெதுப்பாக்கம் [1][2]உயிர்மருத்துவ அறிவியல்கள், புறநிலை (உறழ்திணை) அறிவியல்கள், இயற்கைப் பேரிடர் முன்கணிப்புகள், செர்நோபிள் பேரிடரின் ஐக்கிய இராச்சிய விளைவுகள், அறிவியல் கொள்கை உருவாக்கமும் மீள்பார்வையும் இடர் ஆளுகையும் அதன் புவிசார், வரலாற்றுச் சூழலும் போப்றதாறிவியல் புலங்களைக் கூறலாம். இப்புலம் பல புலக் கலப்பில் உருவானதானாலும், இப்புலத்தின் பங்களிப்பும் அடிப்படையான அக்கறையும் , வல்லுனர்கள் அரசுக்கும் கள உள்ளூர் ஆட்சியமைப்புக்கும் முடிவெடுப்பதற்கான மிகச் சரியான தகவல்களை அளிப்பதிலேயே அமைகிறது.

இந்த அணுகுமுறை வல்லுனர் என்றால் எவர்?, வல்லுனருக்கும் அதிகார அமைப்புக்கும் பொதுமக்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?, வல்லுனர் எப்படி விழுமியங்களோடும் கொள்கை வகுப்பதிலும் இடைவினை புரிகிறார்? எனப் பல கேள்விகளை அல்லது உசாவல்களைத் தாராளவாத சமுகத்தில் தொடுக்கிறது.

அறிவியல் அறிஞர்கள் ஆய்வு மேற்கொள்ளும் பின்வரும் நிகழ்வுகளில் கவனம் செலுத்தி நடைமுறையாளர்கள் தங்கள் பணிகளுக்குப் பயன்கொள்ள முயல்கின்றனர்

  • தொழில்நுட்ப வகைகள், அறிதலுக்கான கருவிகள், அறிதல்சார் பண்பாடுகள், ஆய்வக வாழ்க்கை ( காரின் நோர்-செட்டினல், புரூனோ இலதூர்ரேன்சு-யோர்கு இரெய்ன்பெர்கர் பொன்றோர் ஆய்வுகள்)
  • அறிவியலும் தொழில்நுட்பமும் ( வியெபே பிய்க்கர், திரெவோர் பிஞ்சு, தாமசு பி. அகுசு)
  • அறிவியலும் தொழில்நுட்பமும் சமூகமும் ( பீட்டர் வெய்ஙார்ட்டு, உல்ரைக் ஃபெல்ட்டு, எல்கா நோவோத்னி, இரெய்னர் கிரந்துமன்)
  • மொழியும் கவிதையியலும் ( சார்லசு பாசர்மன், ஆலன் ஜி. குரோசு, கிரெகு மையர்சு)
  • அழகியல் அறிவியலின் அழகியல், அறிவியலில் காட்சிப் பண்பாடு ( பீட்டர் கெய்மர்), அறிவியல் நடைமுறையில் அழகியல் வரன்முறைகளின் பங்களிப்பு, ( கணிதவியல் வனப்பு, அறிவியல் வளர்ச்சியில் உணர்ச்சி, அறிதல், பகுத்தறிவு ஆகியவற்றுக்கு இடையில் உள்ள உறவு)[3]
  • கண்டுபிடிப்பு, எண்ணக்கருக்களின் உருவாக்கம், கருத்துப் படிமங்களின் உருவாக்கம் போன்ற ஆக்கவியல் செயல்முறைகளில் குறியியல் ஆய்வுகள், [4] அல்லது கூட்டுறவுமுறை ஆராய்ச்சியில் பல்வேறு அறிவு வடிவங்களின் ஊடாட்டமும் மேலாண்மையும்[5]
  • பேரளவான ஆராய்ச்சியும் ஆராய்ச்சி நிறுவனங்கள், எ.கா. துகல் மொத்திகள் ( சாரான் திரவீக்)[6]
  • ஆராய்ச்சிசார் அறவியல், அறிவியல் கொள்கை, பல்கலைக்கழகங்களின் பாத்திரம்.[7][8]

புல வரலாறு[தொகு]

மரியா ஓசோவுசுகாவும் சுட்டானிசுலாவ் ஓசோவுசுகியும் 1930 களில் அறிவியல் பயில்வுகள் எனும் கருத்துப் படிமத்தை அறிமுகப்படுத்தினர்.[9] தாமசு குஃனின் நூல் அறிவியல் புரட்சியின் கட்டமைப்பு (1962) அறிவியலின் வரலாற்றில் மட்டுமன்றி, அறிவியல் வரலற்ரு மெய்யியலிலும் மட்டற்ற ஆர்வத்தைத் தூண்டி வளர்த்தது. குஃன்னின் ஆய்வு அறிவியல் புரட்சி என்பது கண்டுபிடிப்புகளின் நேரியல் தொகுப்பல்ல, அறிவியல்சார் மெய்யியலின் சட்டக மாற்றம் ஆகும் என நிறுவியது. சட்டக மாற்றங்கள் அகல்விரிவான சமூக அறிதிறன் ஆக்கங்கள் ஆகும். இவை எவ்வகையான உண்மைக் கோறல் ஏற்புடையது என்பதைத் தீர்மானிக்கின்றன. அறிவியல் பயில்வுகள் அறிவியல்-தொழில்நுட்பம், இயற்கை-செயற்கை, கோட்பாடுகள்-செய்முறைகள், அறிவியல்-கலைகள் போன்ற இணையெதிர்வுகளை இன்ங்காண முயல்கிறது. இதன்வழியக, இது பல்வேறு அறிவியல் புலங்களையும் நடைமுறைகளையும் பிரிக்கிறது. எடின்பர்கு பல்கலைக்கழகத்தில் டேவிடு புளூரும் அவரது கூட்டாளிகளும் அறிவியல் அறிவின் சமூகவியல் எனும் புலத்தை உருவாக்கினர். இதன்வழி அவர்கள் வன்செயல்நிரல் எனும் புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளனர். இந்த வழிமுறை உண்மை, பொய்மை அறிவியல் கோட்பாடுகள் அனைத்தையுமே சமநிலையில் வைக்கவேண்டுமென பரிந்துரைக்கிறது. [10] இவை இரண்டுமே பண்பாட்டுச் சூழல், தன்னார்வம் சார்ந்த சமூக்க் காரனிகளால் அல்லது நிலைமைகளால் உருவானவையே.[11] மாந்த அறிதல் வழி ஏற்பட்ட அனைத்துவகை மாந்த அறிவும் தன் உருவாக்கச் செயல்முறையின்போது நிலவிய சில சமூக உறுப்புகளை உள்ளடக்கியிருக்க வேண்டும்.[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. Martello M (2004) Global change science and the Arctic citizen.Sci Public Policy 31(2):107–115
  2. Jasanoff S (ed) (2004) States of knowledge: the co-production of science and social order. Routledge, Abingdon
  3. International Studies in the Philosophy of Science Volume 16, Issue 1, 2002, Recent work on aesthetics of science DOI:10.1080/02698590120118783 James W. McAllister pages 7-11, 21 Jul 2010
  4. Zeichen für Kunst: Zur Organisierbarkeit von Kreativität Detlev Nothnagel, ZfS, Band 29, Heft 4/2007 ZfS, Band 29, Heft 4/2007 ISBN 978-3-86057-887-2
  5. Organisierte Kreativität: Die vielen Gesichter der Innovation, Rene J.Jorna, in Zeichen für Kunst: Zur Organisierbarkeit von Kreativität Detlev Nothnagel, ZfS, Band 29, Heft 4/2007 ZfS, Band 29, Heft 4/2007 ISBN 978-3-86057-887-2
  6. Sharon Traweek (1992). Beamtimes and lifetimes: the world of high energy physicists. Cambridge, Massachusetts: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780674044449. 
  7. Mario Biagioli: The science studies reader. Routledge, New York 1999, ISBN 0-415-91867-7
  8. Derek de Solla Price: Little Science, Big Science. Von der Studierstube zur Großforschung. Suhrkamp, 1982, ISBN 978-3518076484.
  9. Matthias Kölbel: Wissensmanagement in der Wissenschaft பரணிடப்பட்டது 2020-07-15 at the வந்தவழி இயந்திரம், Berlin: Gesellschaft für Wissenschaftsforschung e.V. c/o Inst. f. Bibliotheks- und Informationswissenschaft der Humboldt-Universität zu Berlin, 2002, elektronische Bereitstellung 2011.
  10. David Bloor, "The strengths of the strong programme." Scientific rationality: The sociological turn (Springer Netherlands, 1984) pp. 75-94.
  11. Wiebe E. Bijker, et al. The social construction of technological systems: New directions in the sociology and history of technology (MIT press, 2012)
  12. Harry M. Collins, "Introduction: Stages in the empirical programme of relativism." Social studies of science (1981): 3-10. in JSTOR

நூல்தொகை[தொகு]

அறிவியல் பயில்வுகள், பொது
  • Bauchspies, W., Jennifer Croissant and Sal Restivo: Science, Technology, and Society: A Sociological Perspective (Oxford: Blackwell, 2005).
  • Biagioli, Mario, ed. The Science Studies Reader (New York: Routledge, 1999).
  • Bloor, David; Barnes, Barry & Henry, John, Scientific knowledge: a sociological analysis (Chicago: University Press, 1996).
  • Gross, Alan. Starring the Text: The Place of Rhetoric in Science Studies. Carbondale: SIU Press, 2006.
  • Fuller, Steve, The Philosophy of Science and Technology Studies (New York: Routledge, 2006).
  • Hess, David J. Science Studies: An Advanced Introduction (New York: NYU Press, 1997).
  • Jasanoff, Sheila, ed. Handbook of science and technology studies (Thousand Oaks, Calif.: Sage Publications, 1995).
  • Latour, Bruno, "The Last Critique," Harper's Magazine (April 2004): 15-20.
  • Latour, Bruno. Science in Action. Cambridge. 1987.
  • Latour, Bruno, "Do You Believe in Reality: News from the Trenches of the Science Wars," in Pandora's Hope (Cambridge: Harvard University Press, 1999)
  • Vinck, Dominique. The Sociology of Scientific Work. The Fundamental Relationship between Science and Society (Cheltenham: Edward Elgar, 2010).
  • Wyer, Mary; Donna Cookmeyer; Mary Barbercheck, eds. Women, Science and Technology: A Reader in Feminist Science Studies, Routledge 2001
புறநிலையும் உண்மையும்
  • Haraway, Donna J. "Situated Knowledges: The Science Question in Feminism and the Privilege of Partial Perspective," in Simians, Cyborgs, and Women: the Reinvention of Nature (New York: Routledge, 1991), 183-201. Originally published in Feminist Studies, Vol. 14, No. 3 (Autumn, 1988), pp. 575–599. (available online பரணிடப்பட்டது 2017-08-29 at the வந்தவழி இயந்திரம்)
  • Foucault, Michel, "Truth and Power," in Power/Knowledge (New York: Pantheon Books, 1997), 109-133.
  • Porter, Theodore M. Trust in Numbers: The Pursuit of Objectivity in Science and Public Life (Princeton: Princeton University Press, 1995).
  • Restivo, Sal: "Science, Society, and Values: Toward a Sociology of Objectivity" (Lehigh PA: Lehigh University Press, 1994).
உயிரியலும் மருத்துவமும்
ஊடகம், பண்பாடு, சமூகம், தொழில்நுட்பம்

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Science studies
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்_பயில்வுகள்&oldid=3721857" இருந்து மீள்விக்கப்பட்டது