அறத் தாக்கக் கழுவாய்க் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறத்தாக்கக் கழுவாய்க் கோட்பாடு (moral influence view of the atonement) என்பது கிறித்துவின் கழுவாய்த் தேடல், கடவுளின் அன்பு (கருணை) மாந்த இதயத்தை இளக்கி மனம் வருந்திடச் செய்வதைச் செயல்பாட்டால் விளக்குகிறது என்ற நம்பிக்கையாகும். இந்தக் கண்ணோட்டமுள்ளவர்கள் மாந்தன் இயல்பிலேயே நலிந்தவன். எனவே அவனுக்குத் துணை தேவைப்படுகிறது. மாந்தனுக்கான கடவுளின் அன்பைப் பார்த்து அவரது பாவமன்னிப்பை ஏற்க இசைவதாக நம்புகின்றனர். அவர்கள் கிறித்துவின் இறப்பின் நோக்கமும் பொருளுமே அவன்பால் கவிந்துள்ள கடவுளின் அன்பைச் செயல்பாட்டால் விளக்குவதே என்று நம்புகின்றனர். கிறித்துவின் கழுவாய் தேடல் கடவுள் காட்டும் அன்பிற்கு நல்ல எடுத்துகாட்டு என்றாலும் இது விவிலியத்துக்கு எதிராக அமைந்துவிடுதலைக் காணலாம். ஏனெனில் (எஃபேசியர்கள் 2:1) இன் படிபாவங்களாலும் புலம்பல்களாலும் இறந்த மாந்தனின் உண்மையான ஆன்மநிலையை மறுக்கிறது. மேலும் இது கடவுள் பாவத்துக்கானக் கடனிறுப்பதையும் மறுக்கிறது. கிறித்துவக் கழுவாய் தேடலுக்கானக் கண்ணோட்டம் மாந்தரினத்தை உண்மையான ஈகம் (தியாகம்) செய்வதிலிருந்தும் பாவக் கட்டனிறுப்பதிலிருந்தும் கைகழுவி விடுகிறது.

வெளி இணைப்பு[தொகு]