அர்மீட் சிங் சாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்மீட் சிங் சாந்து
Harmeet Singh Sandhu
சட்டப் பேரவை உறுப்பினர், பஞ்சாப்
பதவியில்
2002 – 2017
முன்னையவர்பிரேம் சிங் லால்பூர்
பின்னவர்மருத்துவர் தரம்பிர் அக்னிகோத்ரி
தொகுதிகாதூர் சாகிப் மக்களவைத் தொகுதி#தர்ன் தரன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசிரோமணி அகாலி தளம்
வாழிடம்தர்ன் தரன் சாகிப்

அர்மீட் சிங் சாந்து (Harmeet Singh Sandhu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சிரோமணி அகாலி தளம் அரசியல் கட்சியின் உறுப்பினராக பஞ்சாப் அரசியலில் இயங்கினார். 2002 ஆம் ஆண்டு வரை பஞ்சாப் சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். காதூர் சாகிப் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

அர்மீட் சிங் சாந்து 2002 ஆம் ஆண்டில் தர்ன் தரன் தொகுதியிலிருந்து இருந்து பஞ்சாப் சட்டப் பேரவைக்கு சுயேச்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] 2007 ஆம் ஆண்டில் இவர் அகாலி தள வேட்பாளராக தர்ன் தரனில் இருந்து வெற்றிகரமாகப் போட்டியிட்டார்.[5] 2011 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் தலைமை நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[6] 2012 ஆம் ஆண்டில் பஞ்சாப் சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2012 TO THE LEGISLATIVE ASSEMBLY OF PUNJAB" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 20 May 2013.
  2. "Punjab Vidhan Sabha, Shiromani Akali Dal". Akali Dal Badal. Archived from the original on 25 July 2013. பார்க்கப்பட்ட நாள் 20 May 2013.
  3. Punjab data entry on Tarn Taran district
  4. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2002 TO THE LEGISLATIVE ASSEMBLY OF PUNJAB" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 20 May 2013.
  5. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2007 TO THE LEGISLATIVE ASSEMBLY OF PUNJAB" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 20 May 2013.
  6. "Badal gives approval to induct 3 more MLAs as CPS". Zee News. 15 June 2011. http://zeenews.india.com/news/punjab/badal-gives-approval-to-induct-3-more-mlas-as-cps_712914.html. பார்த்த நாள்: 20 May 2013. 

புற இணைப்புகள்[தொகு]

http://eciresults.nic.in/ConstituencywiseS1921.htm?ac=21

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்மீட்_சிங்_சாந்து&oldid=3847789" இலிருந்து மீள்விக்கப்பட்டது