அருணா சான்பாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருணா சான்பாக் (இறப்பு: மே 18, 2015) இந்திய மாநிலம் கருநாடகத்தின் உத்தரகன்னட மாவட்டத்தில் உள்ள ஹல்திப்பூரைச் சேர்ந்த ஓர் செவிலியர். 1973ல் அவர் வேலை பார்த்து வந்த மும்பையில் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் அவருக்குக் கீழ் வேலை பார்த்த வளவுப்பணியாளர் சோகன்லால் பரத் வால்மீகியால் வன்புணர்ச்சி செய்யப்பட்டார். இத்தாக்குதலின்போது கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் மூளையின் சிலபகுதிகள் பாதிக்கப்பட்டு பார்வை, செவித்திறன் மற்றும் உணர்ச்சியற்று 37 ஆண்டுகளாகக் கோமா நிலையில் இருந்தார். இந்நிலையில் அவரைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிய மனுவை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம் அதற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு[தொகு]

இந்நிலையில் அருணாவை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டுமென எழுத்தாளர் பிங்கு விரானி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, கியான்சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் மார்ச் 7, 2011ல் விசாரணைக்கு வந்தது. அருணா தங்கவைக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 37 ஆண்டுகளாக மருத்துவமனையில் உள்ள அருணாவை அங்குள்ள செவியர்களும், டாக்டர்களும் அர்பணிப்பு உணர்வுடன் கவனித்து வருவதாக வாதிட்டார். அதை கவனத்தில் எடுத்த நீதிபதிகள், கருணைக் கொலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்து தீர்ப்பளித்தனர்.[1] மிகவும் தவிர்க்க முடியாத, சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே ஒருவர் கருணைக் கொலை செய்யப்படலாம் என்றும் கருணைக் கொலை என்பது சட்டவிரோதமானது என்று கூறியுள்ளனர்.

அருணாவின் கதை (நூல்)[தொகு]

அருணாவின் கதை என்ற நூலை பிங்கி விரானி என்ற எழுத்தாளர் எழுதினார். வினய் ஆப்தே மற்றும் தத்தகுமார் தேசாய் மராத்தி மொழியில் கதா அருணாச்சி என்ற மேடை நாடகத்தை எழுதினர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆவணம்
  2. Shahane, Devayani (202-05-23). "Rape and Reality". Pune Times (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா). http://timesofindia.indiatimes.com/NEWS/City/Pune-Times/Rape-and-Reality/articleshow/13703462.cms. பார்த்த நாள்: 2009-10-25. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணா_சான்பாக்&oldid=2210814" இலிருந்து மீள்விக்கப்பட்டது