அரிசித்தாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரிசித்தாள் என்று அறியப்படுவது பல்வேறு இடங்களில் பல்வேறு விஷயங்களுக்காக மேற்கத்திய நாடுகளில் பயன்படுகிறது. அரிசித்தாள் என்று பெயர் வருவதற்கு காரணம் அதனை ஆசியாவுடன் தொடர்பு படுத்துவதன் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அரிசித்தாள் என்று அழைக்கப்படுவதால் இது நெல்லில் இருந்து உருவாக்கப்படுகிறது என்று பொருள் கொள்ளல் ஆகாது.[1]

உணவுக்காக பயன்படும் அரிசித்தாள்

பயன்பாடுகள்[தொகு]

  • காகிதப்பூக்கள்: இருபதாம் நூற்றாண்டில் அரிசித்தாள் செடி என்று அழைக்கப்பட்ட செடி ஒன்று ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பெயர் அரிசியோடு அமைந்ததே ஒழிய இச்செடிக்கும் அரிசிக்கும் எவ்வகை தொடர்பும் இல்லை. ஆனால் இந்தச் செடியில் இருந்து காகிதங்கள் தயாரிக்க முடிந்தது. அவ்வகை தயாரிக்கப்பட்ட காகிதங்கள் காகிதப்பூக்கள் செய்ய ஐரோப்பா முழுவதும் பயன்பட்டன.[2]
  • உணவுப்படலம்: உணவுத்துறையில் வியட்நாமிய உணவுகளின் மேற்படலமாய் வழிவழியாகவே உண்ண உகந்த அரிசித்தாள் என்ற மெல்லிய காகிதம் போன்ற தட்டையான பொருள் பயன்பட்டு வந்தது. இது அரிசித்தாள் என்று அழைக்கப்படக் காரணம், இந்த படலம் அரிசிச்சக்கையை முதன்மையாக வைத்து உருவாக்கப்பட்டது. சுவைக்காக சிலமுறை பால், மரவள்ளிக்கிழங்கு, வாழைப்பழம் முதலியன சேர்த்தும் உருவாக்கப்படுகிறது.[3]
  • உணவைக்கட்டுதல்: ஆசியாவில் மல்பெரி மரப்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒருவகை காகிதம் உணவைக் கட்டி எடுத்துச் செல்ல பயன்பட்டது. உணவு அரிசியால் செய்யப்பட்டதாக இருந்தமையால், அவ்வகை காகிதம் அரிசித்தாள் என்றே அறியப்பட்டது. ஆனால் இவ்வகை அரிசித்தாள் சாப்பிட உகந்ததல்ல.
  • பொதுபயன்பாடு: பொதுவாகவே ஆசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காகிதங்கள் அரிசித்தாள் என்ற பெயரிலேயே ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகப்படுத்தி வைக்கப்படுகின்றன. இவ்வகை தாள்கள் எழுத வரைய உள்ளிட்ட சாதரண காகிதங்களின் பயன்பாடுகளை ஒத்திருக்கும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசித்தாள்&oldid=3112804" இருந்து மீள்விக்கப்பட்டது