அரசு மேல்நிலைப் பள்ளி, மறமடக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசு மேல்நிலைப்பள்ளி, மறமடக்கி (Government High Secondary School Maramadakki) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், மறமடக்கி கிராமத்தில் அமைந்துள்ளது.

நிர்வாகம்[தொகு]

இப்பள்ளி தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படுகிறது. மாவட்ட அளவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இப்பள்ளியின் நிர்வாகத்தைக் கவனிக்கிறார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்[தொகு]

மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமாா் 1200 மாணவா்கள் பயின்று வருகின்றனர். மொத்தம் 29 ஆசிரியா்கள் பணியாற்றும் இப்பள்ளியில் 4 பிாிவுகள் உள்ளன. 1.கணிணிப் பிாிவு 2.உயிாியல் பிாிவு 3.அறிவியல் பிரிவு 4. வேளாண்மைப் பிாிவு.

நலத்திட்டங்கள்[தொகு]

சீருடை, காலனிகள், புத்தகப்பை, பாடநுால்கள், நோட்டுப்புத்தகங்கள், பேருந்து பயண அட்டை போன்ற அனைத்து தமிழக அரசின் நலத்திட்டங்களும் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று மாணவ, மாணவியா் ஆா்வமுடன் கல்வி கற்று வருகின்றனா்.[1] அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]