அரசு உயர்நிலைப் பள்ளி, வாரியூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் எழில்மிகு தோற்றம்

வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் அமைந்துள்ளது.

பள்ளியின் தோற்றம்[தொகு]

இப்பள்ளியானது 1946 ஆம் ஆண்டு சூன் மாதம் 3ஆம் தேதி அரசு தொடக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அரசு உயர்நிலைப்பள்ளியாக 1992 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது.

பயிலும் மாணவர்கள்[தொகு]

இப்பள்ளியில் 2017-18 ஆம் கல்வியாண்டில் 217 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.

இயங்கிவரும் அமைப்புகள்[தொகு]

  1. சாரணர் இயக்கம்
  2. செஞ்சிலுவைச் சங்கம்
  3. நுகர்வோர் மன்றம்