அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கீரனூர் (Government Boys Higher Secondary School, Keeranur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவில் புதுக்கோட்டை- திருச்சி செல்லும் வழியில் புதுக்கோட்டையிலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

நிர்வாகம்[தொகு]

இப்பள்ளி தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படுகிறது. இதன் நிர்வாகப்பொறுப்பை மாவட்ட அளவில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கவனிக்கிறார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்[தொகு]

இப்பள்ளியில் 2016-17 கல்வியாண்டின்படி 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 1 தலைமையாசிரியர், 12 பட்டதாரி ஆசிரியர்கள், 14 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 2 இடைநிலையாசிரியர்கள், 2 உடற்கல்வியாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தேர்ச்சி விவரம்[தொகு]

12-ஆம் வகுப்பில் 2015-16-ஆம் கல்வியாண்டு முதல் மாணவர்கள் 1000க்கும் மேற்பட்ட மதிப்பெண்களை பெற்று பெருமை சேர்த்து வருகின்றனர். பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் 2015-16-இல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் முதலிடம் பெற்றது இப்பள்ளி. கடந்த ஆண்டு (2016-17) 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கணினிகள் போன்ற தொழில்நுட்பம் கொண்டு பாடம் கற்பிக்கப்படுகிறது. கலை, பேச்சு, மற்றும் பிற துறைகளிலும் இப்பள்ளி மாணவர்கள் பரிசு பெற்றுள்ளனர்.[1] மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=673884[தொடர்பிழந்த இணைப்பு]
  2. தினத்தந்தி (2022-10-31). "கீரனூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.