அரசுப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசுப் பள்ளி அல்லது பொதுப் பள்ளி என்பது அனைத்து மாணவர்களுக்கும் கட்டணம் ஏதுமின்றி கல்வி கற்பிக்கும் ஒரு தொடக்க , இடைநிலை அல்லது மேல்நிலைப்பள்ளியாகும். அத்தகைய பள்ளிகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வரிவிதிப்பு மூலம் நிதியளிக்கப்படுகின்றன.

அரசின் நிதியுதவி பெறும் பள்ளிகள் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளன, இருப்பினும் அவற்றின் கட்டமைப்பு மற்றும் கல்வித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. அரசு நிதியுதவி பெறும் கல்வியானது பொதுவாக ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை உள்ளடக்கியது (4 வயது முதல் 18 வயது வரை).

பிராந்தியம் மற்றும் நாடு வாரியாக[தொகு]

ஆசியா[தொகு]

இந்தியா[தொகு]

ஆங்கிலேயர் ஆட்சியின் போது, பல மாநிலங்களில் உயர் கல்வி நிறுவனங்கள் (சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் உள்ள பல்கலைக்கழகங்கள் போன்றவை) அமைக்கப்பட்டன. பள்ளிக் கல்வியினைப் பொறுத்தமட்டில் ஆரம்ப, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை போதுமான அளவில் உருவாக்கப்படவில்லை. பிற உள்நாட்டு கல்வி முறைகள் இந்தியா முழுவதும் பல்வேறு வழிகளில் புத்துயிர் பெற்று வருகின்றன. தற்போதைய மதிப்பீட்டின்படி, அனைத்து இந்தியப் பள்ளிகளிலும் 80% அரசுப் பள்ளிகள் மாணவர்களுக்கு கல்வியினை வழங்குகிறது.[1] இருப்பினும், பொதுக் கல்வியின் தரம் குறைவாக இருப்பதால் 27% இந்தியக் குழந்தைகள் தனியார் கல்வியில் உள்ளனர். சில ஆய்வுகளின்படி, தனியார் பள்ளிகள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளை விட சிறப்பான கல்வியினை வழங்குகின்றன. [2] [3] மாணவர்-ஆசிரியர் விகிதம் பொதுவாக அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் மிகவும் குறைவாக உள்ளது, மேலும் போட்டி மனப்பான்மையினை மாணவர்களிடையே உருவாக்குகிறது. இந்தியாவில் கல்வியானது, பொதுத்துறை மற்றும் தனியார் துறையால் வழங்கப்படுகிறது, கட்டுப்பாடு மற்றும் நிதி ஆகியன கூட்டாட்சி, மாநிலம் மற்றும் உள்ளூர் எனும் மூன்று நிலைகளில் இருந்து வருகிறது. நாளந்தா பல்கலைக்கழகம் உலகின் மிகப் பழமையான கல்வி அமைப்பாகும். மேற்கத்திய கல்வியானது பிரித்தானிய ஆட்சியினால் இந்திய சமூகத்தில் வேரூன்றியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Telangana TS Results". AP TS Manabadi Results இம் மூலத்தில் இருந்து Sep 11, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150911134606/http://www.aptsmanabadiresults.in/p/telangana-ts-results.html. 
  2. "A special report on India: Creaking, groaning: Infrastructure is India's biggest handicap". The Economist. 11 December 2008 இம் மூலத்தில் இருந்து Dec 15, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081215065802/http://www.economist.com/specialreports/displaystory.cfm?story_id=12749787. 
  3. Geeta Gandhi Kingdon (March 2007). "The progress of school education in India" (PDF). Global Poverty Research Group. Archived from the original (PDF) on 2010-12-27. பார்க்கப்பட்ட நாள் 2010-12-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசுப்_பள்ளி&oldid=3891751" இலிருந்து மீள்விக்கப்பட்டது