அயோடார்கைரைட்டு
தோற்றம்
| அயோடார்கைரைட்டு Iodargyrite | |
|---|---|
கோசானின் மேல் அயோடார்கைரைட்டு, புரோக்கன் இல் தாதுப் படிவுகள், நியு சவுத் வேல்சு, ஆத்திரேலியா. | |
| பொதுவானாவை | |
| வகை | ஆலைடு கனிமங்கள் |
| வேதி வாய்பாடு | AgI |
| இனங்காணல் | |
| நிறம் | நிறமற்றது (புதியது); வெளிர் மஞ்சள், மஞ்சள், பசுமஞ்சள், பழுப்பு, சாம்பல் |
| படிக அமைப்பு | அறுகோணம் |
| மோவின் அளவுகோல் வலிமை | 1 1⁄2 - 2 |
| மிளிர்வு | வளையாதது, பிசின் தன்மையுடையது |
| கீற்றுவண்ணம் | மஞ்சள் பளபளப்பு |
| ஒளிஊடுருவும் தன்மை | ஓளி ஊடுருவும், ஒளிகசியும் |
| ஒப்படர்த்தி | 5.69 |
| ஒளியியல் பண்புகள் | ஓரச்சு (+) |
| ஒளிவிலகல் எண் | nω = 2.210 nε = 2.220 |
| இரட்டை ஒளிவிலகல் | δ = 0.010 |
அயோடார்கைரைட்டு (iodargyrite) என்பது AgI என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். அயோடைரைட்டு என்ற பெயராலும் இக்கனிமம் அழைக்கப்படுகிறது. வெள்ளி அயோடைடு சேர்மத்தினுடைய இயற்கையாகத் தோன்றும் கனிம வடிவமாக அயோடார்கைரைட்டு கருதப்படுகிறது.
மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 1.5 முதல் 2 வரையிலான அளவில் கடினத்தன்மை மதிப்பை இக்கனிமம் பெற்றுள்ளது.
குளோரார்கைரைட்டும் புரோமார்கைரைட்டும் இக்கனிமத்துடன் தொடர்புடைய கனிமங்களாகும்.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் அயோடார்கைரைட்டு கனிமத்தை Iag[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
